கோப்புப் படம்.
ஹைதராபாத் அருகே பயிற்சி விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம், மேடக் மாவட்டத்தில் டூப்ரான் அருகே பயிற்சி விமானம் ஒன்று திங்கள்கிழமை காலை 8.30 மணியளவில் விபத்துக்குள்ளானது. விமானம் பாறைகளுக்கு இடையே விழுந்ததும் தீப்பிடித்தது.
விபத்து நடந்த பகுதிக்கு விரைந்த அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். ஹைதராபாத்தில் இருந்து 60 கி.மீ. தொலைவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இருப்பினும் இதில் உயிர்ச்சேதம் ஏற்பட்டதாக தகவல் எதுவும் இல்லை.
செய்திகள் உடனுக்குடன்… வாட்ஸ்ஆப் சேனலில் ‘தினமணி’யைப் பின்தொடர…


