Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

லோக்சபா தேர்தலில் ‘ஹாட்ரிக்’ வெற்றி உறுதி தேர்தல் முடிவுகள் குறித்து பிரதமர் பெருமிதம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 4, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
லோக்சபா தேர்தலில் ‘ஹாட்ரிக்’ வெற்றி உறுதி தேர்தல் முடிவுகள் குறித்து பிரதமர் பெருமிதம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


புதுடில்லி : ”மூன்று மாநில சட்டசபை தேர்தலில் கிடைத்த வெற்றி, ‘சுயசார்பு இந்தியா’ எனும் மத்திய அரசின் திட்டத்துக்கு கிடைத்த வெற்றியாகும். மாநிலங்களில் கிடைத்த இந்த, ‘ஹாட்ரிக்’ வெற்றி, அடுத்த ஆண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலின், ‘ஹாட்ரிக்’ வெற்றிக்கான உத்தரவாதம்,” என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் சட்டசபை தேர்தல் வெற்றி குறித்து, புதுடில்லியில் உள்ள பா.ஜ., தலைமையகத்தில், தொண்டர்கள் முன்னிலையில் பிரதமர் மோடி நேற்று பேசியதாவது:

ஊழலுக்கு எதிரான நம் போருக்கு மக்கள் அளித்துள்ள ஆதரவை இந்த வெற்றி உணர்த்துகிறது.

எச்சரிக்கை

மேடையில் வாரிசுகளை திரட்டி கூட்டம் போடுவதன் வாயிலாக நல்ல புகைப்படம் கிடைக்குமே தவிர, மக்கள் நம்பிக்கையை பெற முடியாது என்பதை காங்கிரஸ் மற்றும் ‘இண்டியா’ கூட்டணி கட்சிகளுக்கு மக்கள் உணர்த்தி உள்ளனர்.

ஊழலில் திளைத்த கட்சிகள் ஒதுங்கவில்லை எனில், ஒழித்துவிடுவோம் என, வாக்காளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மாநிலங்களில் கிடைத்துள்ள இந்த, ‘ஹாட்ரிக்’ வெற்றி, அடுத்த ஆண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலின், ‘ஹாட்ரிக்’ வெற்றிக்கான உத்தரவாதம் என மக்கள் இப்போதே கூறத் துவங்கிவிட்டனர்.

நாடு வேகமாக வளர்ந்து வரும் இந்த நேரத்தில், தேசத்தின் நலனுக்கு எதிராக செயல்படுபவர்களுக்கு எதிர்க்கட்சியினர் ஆதரவு தர வேண்டாம்.

இந்த வெற்றி, இந்தியா மீதான உலக நாடுகளின் நம்பிக்கையை உறுதி செய்வதுடன், சர்வதேச முதலீட்டாளர்களுக்கு அதிக நம்பிக்கையை அளிக்கும். பலமான பெரும்பான்மை உடைய நிலையான அரசுக்கு மக்கள் ஓட்டளிப்பதை உலகமே உற்று நோக்குகிறது.

நான்கு ஜாதிகள்

பெண்கள், இளைஞர்கள், ஏழைகள் மற்றும் விவசாயிகள் நாட்டின் நான்கு பெரிய ஜாதிகள். அவர்களுக்கு வழங்கப்படும் அதிகாரம் நாட்டின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

நாட்டில் வாழும் ஒவ்வொரு விவசாயியும், இளம் வாக்காளர்களும், ஏழைகளும், ஒடுக்கப்பட்டவர்களும் அவர்கள் வெற்றி பெற்றதாக உணர்கின்றனர்.

ஒளிமயமான எதிர்காலத்தை எதிர் நோக்கும் இளைஞர்களும், 2047ல் நாம் வளர்ந்த நாடாக உருவாக வேண்டும் என நினைக்கும் ஒவ்வொரு இந்தியரும் இந்த வெற்றியை கொண்டாடுகின்றனர். உங்கள் கனவுதான் என்னுடைய தீர்மானம் என்பதை இந்த நேரத்தில் முழு நேர்மையுடன் உறுதிபட கூறுகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்



.

Previous Post

மக்கள் தீா்ப்பை காங்கிரஸ் பணிவுடன் ஏற்கிறது: ராகுல் காந்தி

Next Post

ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கா் முதல்வா்கள் ராஜிநாமா

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கா் முதல்வா்கள் ராஜிநாமா

ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கா் முதல்வா்கள் ராஜிநாமா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In