அடுத்த பொதுத் தேர்தலையொட்டி, பிரதமர் நரேந்திர மோடியின் படங்களை பின்னணியில் வைத்து செல்ஃபி பாயின்ட்களை அமைக்குமாறு நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு பல்கலைக்கழக மானியக் குழு கேட்டுக் கொண்டுள்ளது.
மாணவர்களையும் பார்வையாளர்களையும் இந்த இடங்களில் செல்ஃபி எடுக்கவும், அவற்றை மீடியா தளங்களில் பகிரவும் ஊக்குவிக்குமாறு உயர்கல்வி கட்டுப்பாட்டாளர் வளாக அதிகாரிகளிடம் கூறி அவர்களை பாஜகவின் அதிகாரப்பூர்வமற்ற பிரச்சாரகர்களாக மாற்றியுள்ளார் என்று மாணவர்கள் கூறுவதை காணமுடிகிறது.
“பல்வேறு துறைகளில் இந்தியாவின் சாதனைகளின் விளைவாக கூட்டுப் பெருமித உணர்வை வளர்ப்பது” என்று UGC குறிப்பிட்டுள்ளதை சுற்றி மோடி அவர்களை முன்னிலைப்படுத்தி ஒரு சலசலப்பை உருவாக்குவதே இதன் குறிக்கோளாகும் என்று தெரிய வருகிறது.
“பல்வேறு துறைகளில் இந்தியாவின் முன்னேற்றத்திலிருந்து பெறப்பட்ட உத்வேகத்துடன் இளைஞர்களின் மனதை வடிவமைக்கும் ஆற்றலையும் உற்சாகத்தையும் பயன்படுத்த ஒரு தனித்துவமான வாய்ப்பு உள்ளது” என்று அனைத்து இந்திய பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கும் யுஜிசி செயலாளர் மணீஷ் ஜோஷி அனுப்பிய கடிதம் கூறுகிறது.
“உங்கள் நிறுவனத்திற்குள் ‘செல்ஃபி பாயிண்ட்’ ஒன்றை நிறுவுவதன் மூலம் நம் நாடு அடைந்த அபாரமான முன்னேற்றங்களைக் கொண்டாடி, பரப்புவோம். பல்வேறு துறைகளில் இந்தியாவின் சாதனைகள், குறிப்பாக தேசிய கல்விக் கொள்கை 2020ன் கீழ் புதிய முயற்சிகள் குறித்து இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே ‘செல்ஃபி பாயின்ட்டின்’ நோக்கம் என்று குறிப்பிட்டுள்ளார்.
“இந்த சிறப்புத் தருணங்களை சமூக ஊடக தளங்களில் படம்பிடித்து பகிர்ந்து கொள்ள மாணவர்கள் மற்றும் பார்வையாளர்களை ஊக்குவிக்க நீங்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள் என்று அந்தக் கடிதம் மேலும் கூறுகிறது.
யுஜிசி செல்ஃபி பாயிண்ட்டுகளுக்கு பலவிதமான டிசைன்களை பரிந்துரைத்துள்ளது. ஒவ்வொரு வடிவமைப்பும் கல்வியின் சர்வதேசமயமாக்கல், வேற்றுமையில் ஒற்றுமை, ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான், இந்திய அறிவு அமைப்பு, பன்மொழி மற்றும் உயர்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புதுமைகளில் இந்தியாவின் எழுச்சி போன்ற ஒரு குறிப்பிட்ட கருப்பொருளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

