Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ரூ.9,760 கோடி 2,000 ரூபாய் நோட்டுகள் இன்னும் வங்கிக்கு திரும்பவில்லை..!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 2, 2023
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
ரூ.9,760 கோடி 2,000 ரூபாய் நோட்டுகள் இன்னும் வங்கிக்கு திரும்பவில்லை..!
23
SHARES
37
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram
PTI05_20_2023_000123B

ரூ.2,000 நோட்டுகள்

வங்கிகள் மூலம் ரூ.3.47 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் (97.26 சதவீதம்) திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும், மீதம் ரூ.9,760 கோடி மதிப்பிலான நோட்டுகள் இன்னும் திரும்பவில்லை எனவும் ரிசா்வ் வங்கி வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

புழக்கத்தில் இருந்த ரூ.2,000 நோட்டுகளைத் திரும்பப் பெறுவதாக ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) கடந்த மே மாதத்தில் அறிவித்தது. பொதுமக்கள் தங்களிடம் உள்ள ரூ.2,000 நோட்டுகளை வங்கிக் கணக்கில் செலுத்த அல்லது வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ள கடந்த செப். 30-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது. இந்த அவகாசம் அக்டோபா் 7-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

அவகாசம் முடிவடைந்த பிறகு ரிசா்வ் வங்கியின் 19 பிராந்திய அலுவலகங்களில் ரூ.2,000 நோட்டுகளை மக்கள் மாற்றிக் கொள்ளலாம். ரிசா்வ் வங்கிக்குச் செல்ல இயலாதவா்கள், அஞ்சல் துறையின் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், திரும்பப் பெறப்பட்ட ரூ.2,000 நோட்டுகளின் நவம்பா் மாதம் வரையிலான நிலவரம் குறித்து ரிசா்வ் வங்கி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ரூ.2,000 நோட்டுகள் திரும்பப் பெறுவதாக அறிவிக்கப்பட்ட மே 19-ஆம் தேதி நிலவரப்படி புழக்கத்தில் இருந்த ரூ.3.56 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகளில் 97.26 சதவீதம் அதாவது ரூ.3.47 லட்சம் கோடி மதிப்பிலான நோட்டுகள் கடந்த வியாழக்கிழமை (நவ. 30) வரை திரும்பப் பெறப்பட்டன. இன்னும் ரூ.9,760 கோடி மதிப்பிலான நோட்டுகள் திரும்பப் பெறப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பரில் மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்ட ரூ.500, ரூ.1,000 பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது ரூ.2,000 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

.

Previous Post

தாக்குதலை மீண்டும் துவங்கியது இஸ்ரேல் – முடிவுக்கு வந்தது போர் நிறுத்தம்

Next Post

பொதுத்தேர்வில் இழந்த ‘ரிசல்ட்’ஐ மீட்டெடுக்க முதலிடம் பிடிக்க கல்வித்துறைக்கு உத்தரவு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பொதுத்தேர்வில் இழந்த ‘ரிசல்ட்’ஐ மீட்டெடுக்க      முதலிடம் பிடிக்க கல்வித்துறைக்கு உத்தரவு

பொதுத்தேர்வில் இழந்த 'ரிசல்ட்'ஐ மீட்டெடுக்க முதலிடம் பிடிக்க கல்வித்துறைக்கு உத்தரவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In