மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் எய்ட்ஸ் தடுப்பு தின விழிப்புணர்வு பிரச்சார பேரணியை ஆட்சியர் சங்கீதா தொடங்கி வைத்தார்.
உலகம் முழுவதும் டிசம்பர் 1ஆம் தேதி எய்ட்ஸ் தடுப்பு தினமாக கடைப்பிடிக்கப் படுவதையொட்டி, மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா எய்ட்ஸ் தடுப்பு தின விழிப்புணர்வு பிரச்சார பேரணியை துவங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் “டான்சாக்ஸ்” மாவட்ட திட்ட மேலாளர் ஜெயபாண்டி வரவேற்புரை ஆற்றினார்.

நிகழ்ச்சியில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் பி.குமரகுருபரன், ராஜாஜி மருத்துவமனை டீன் ரத்தினவேல், உசிலம்பட்டி நலப்பணிகள் இணை இயக்குனர் ஆர்.செல்வராஜ், ராஜாஜி மருத்துவமனை நுண்ணுயிரியல் துறை இயக்குனர் பி.தனலட்சுமி, மாநகராட்சி நகர் நல அலுவலர் எஸ்.வினோத்குமார், ராஜாஜி மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் வி.ஆர்.கணேசன், என்.ஆர்.டி பிளஸ் மைய நோடல் ஆபீஸர் எம்.நடராஜன், உதவி மருத்துவ கண்காணிப்பாளர் சி.தர்மராஜ், மருத்துவ பணிகள் துணை இயக்குனர் (காசநோய்) வி.ராஜசேகரன், மாவட்ட ரத்த வங்கி அலுவலர் எம்.சிந்தா, வி.என்.பி பிளஸ் டிராப் இன் சென்டர் திட்ட இயக்குனர் எம்.அய்யப்பன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.
முடிவில் ராஜாஜி மருத்துவமனை ஏ.ஆர்.டி பிளஸ் மைய மருத்துவ அலுவலர் எம்.குமதவள்ளி நன்றியுரை ஆற்றினார். இந்த விழிப்புணர்வு பேரணி பனகல் சாலை வழியாக அரசு ராஜாஜி மருத்துவமனை கூட்ட அரங்கு வரை சென்று நிறைவடையும். அதனை தொடர்ந்து கூட்டரங்கில் உறுதி மொழி எடுப்பு, கையெழுத்து பிரச்சார துவக்கம், தகவல் தொடர்பு சாதனங்கள் வெளியீடு, கருத்தரங்கம், மாணவ, மாணவியர்களுக்கு பரிசளிப்பு, சிறந்த சேவைகளுக்கான பாராட்டு மற்றும் ஆட்டோ டாப் ஸ்டிக்கர் ஒட்டுதல் போன்றவை நடைபெற்றது.


சொல்வதற்கு ஒன்றுமில்லை