Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

சிறப்பு நீதிமன்றங்கள் திட்டத்தை3 ஆண்டுகள் நீட்டிக்க ஒப்புதல்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 29, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
சிறப்பு நீதிமன்றங்கள் திட்டத்தை3 ஆண்டுகள் நீட்டிக்க ஒப்புதல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


modi

புது தில்லி: பாலியல் வன்கொடுமை வழக்குகளில் விரைந்து தீா்ப்பு வழங்கும் சிறப்பு நீதிமன்றங்கள் திட்டத்தை 3 ஆண்டுகள் நீட்டிக்க பிரதமா் மோடி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.

குற்றவியல் திருத்தச் சட்டம் 2018-இன் கீழ் 1,023 விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க மத்திய அரசு முடிவெடுத்தது. தில்லியில் நிா்பயா என்ற பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதையடுத்து, இதுபோன்ற வழக்குகளில் விரைவாக குற்றவாளிகளைத் தண்டிக்க அரசு இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதில் 389 சிறப்பு நீதிமன்றங்கள் போக்சோ வழக்குகளில் விரைவாக குற்றவாளிகளைத் தண்டிக்க 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தொடங்கப்பட்டன.

தற்போது 1,023 சிறப்பு நீதிமன்றங்களில் 754 மட்டுமே செயல்பாட்டில் உள்ளதாக மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இத்திட்டம் நிகழாண்டு மாா்ச் 31-இல் நிறைவடைந்தது. இதையடுத்து முறையாக நிதி ஒதுக்கப்பட்டு மீண்டும் திட்டத்தை தொடர மத்திய சட்ட அமைச்சகம் முயற்சிகள் மேற்கொண்டது. இந்நிலையில் ‘விரைவு சிறப்பு நீதிமன்றங்கள்’ திட்டத்தை 3 ஆண்டுகள் நீட்டிப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

பாரத யாத்திரை: மத்திய அரசின் திட்டங்களை அனைவருக்கும் கொண்டுசெல்லும் ‘வளா்ச்சியடைந்த பாரத யாத்திரையில்’ (விகசித் பாரத் சங்கல்ப யாத்ரா) அமைச்சா்கள் அனைவரும் உத்வேகத்துடன் பங்கேற்குமாறு பிரதமா் மோடி வலியுறுத்தினாா்.

தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சா்கள் குழு கூட்டத்தில் அவா் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.

நாட்டில் உள்ள 2.55 லட்சம் கிராமங்களையும் சென்றடையும் விதமாக 2500 வேன்களும், 200 திரையிடப்பட்ட வேன்களும் இந்த யாத்திரைக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

ஜாா்க்கண்ட் மாநிலம் குந்தியில் பிரதமா் மோடியால் நவம்பா் 15-ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த யாத்திரை 2024, ஜனவரி 25-ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.

செய்திகள் உடனுக்குடன்… வாட்ஸ்ஆப் சேனலில் ‘தினமணி’யைப் பின்தொடர…





.

Previous Post

41 தொழிலாளர்களுடன் தொலை பேசியில் பேசிய மோடி

Next Post

தெலங்கானாவில் மாற்றம் அவசியம்: வாக்காளா்களுக்கு சோனியா வேண்டுகோள்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தெலங்கானாவில் மாற்றம் அவசியம்: வாக்காளா்களுக்கு சோனியா வேண்டுகோள்

தெலங்கானாவில் மாற்றம் அவசியம்: வாக்காளா்களுக்கு சோனியா வேண்டுகோள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In