புதுடில்லி: செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை திரும்பப் பெற அனுமதித்து மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கீழமை நீதிமன்றத்தில் ஜாமின் பெற மனுதாக்கல் செய்ய செந்தில் பாலாஜி தரப்புக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை வழங்கி உள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்து புழல் சிறையில் அடைத்தது. சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்க மறுத்தது. இதனைத் தொடர்ந்து மருத்துவ காரணங்களை சுட்டிக்காட்டி உச்சநீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில், நான் செந்தில் பாலாஜி க்கு ஏற்பட்டுள்ள மூளை கோளாறு குறித்து கூகிளில் தேடினேன், அவருக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனை மருந்துகளால் தீர்க்ககூடியதே என்று கூறி, மருத்துவ காரணங்கள் அடிப்படையில் ஜாமின் வழங்க முடியாது என்று உச்சநீதிமன்ற நீதிபதி கூறி அவரது ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தார்.
கீழமை நீதிமன்றத்தில் ஜாமின் பெற மனுதாக்கல் செய்ய செந்தில் பாலாஜி தரப்புக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை வழங்கி உள்ளது.

