சென்னை சவீதா சட்ட கல்லூரி சார்பாக சிறப்பாக நடைபெற்ற Jus Festum 2023 நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சட்டக்கல்லூரி மாணவர்களுடன் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உரையாடினார்.
இதில் சவீதா பல்கலைக்கழக வேந்தர் திரு.Dr.N.M.வீரையன் மற்றும் ஆசிரியர்கள்,மாணவர்கள் ஆகியோர் பங்கு பெற்றனர்.
சமீபத்தில் முன்னாள் மத்திய அமைச்சரும் அரக்கோணம் தொகுதியின் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகத்ரட்சகன் தொடர்புள்ள இடங்களில் நடைபெற்ற வருமான வரி சோதனைகளில் சவிதா பல்கலைகழகமும் ஒன்றாகும்.
சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள சவிதா கல்வி குழும உரிமையாளர் வீரய்யன் வீடு, தண்டலத்தில் செயல்படும் சவிதா மருத்துவ குழுமம், கல்வி நிறுவனத்தின் ஆடிட்டர் வீடு, ஈரோட்டில் உள்ள வீடு உள்பட 45 இடங்களில் 300க்கும் மேற்பட்ட வருமானவரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.









