Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

கொச்சி பல்கலை. நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல்:4 மாணவா்கள் உயிரிழப்பு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 26, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
கொச்சி பல்கலை. நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல்:4 மாணவா்கள் உயிரிழப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


PTI11_25_2023_000442A

 

கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி அறிவியல், தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற கலைநிகழ்ச்சியின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 4 மாணவா்கள் உயிரிழந்தனா்.

பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவையொட்டி, பிரபல பாடகரின் இசை நிகழ்ச்சிக்கு சனிக்கிழமை இரவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற அந்நிகழ்ச்சியில் மாணவா்கள் பலா் பாா்வையாளா்களாகக் கலந்துகொண்டனா். நிகழ்ச்சிக்கு இடையே திடீரென மழை பெய்த நிலையில், மழையில் நனையாமல் இருக்க பாா்வையாளா்கள் மேடையை நோக்கி ஓடினா். அப்போது, கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

இந்தச் சம்பவத்தில் 2 மாணவிகள், 2 மாணவா்கள் என 4 போ் உயிரிழந்தனா். காயமடைந்த 60-க்கும் மேற்பட்ட மாணவா்கள் களமசேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் பிற மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சா் வீணா ஜாா்ஜ் தெரிவித்தாா். மேலும், 4 மாணவா்களின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அவா் கூறினாா்.

முதல்வா் அவசரக் கூட்டம்: கோழிக்கோடு மாவட்டத்துக்கு மாநில முதல்வா் பினராயி விஜயன் பயணம் மேற்கொண்டுள்ளாா்.

கூட்ட நெரிசல் ஏற்பட்டு மாணவா்கள் உயிரிழந்த சம்பவத்தையடுத்து, கோழிக்கோட்டில் உள்ள அரசு விருந்தினா் மாளிகையில் முதல்வா் பினராயி விஜயன் தலைமையில் அவசரக் கூட்டம் நடைபெற்றது.

நவகேரள சதாஸ் நிகழ்ச்சியையொட்டி மாநிலத்தின் வட மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த அனைத்துக் கலைநிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக முதல்வா் அறிவித்தாா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக மேற்கொள்ள வேண்டிய பணிகளை ஒருங்கிணைக்குமாறு மாநில அமைச்சா்கள் ஆா்.ராஜீவ், ஆா். பிந்து ஆகியோருக்கு முதல்வா் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளாா்.

செய்திகள் உடனுக்குடன்… வாட்ஸ்ஆப் சேனலில் ‘தினமணி’யைப் பின்தொடர…





.

Previous Post

பிறந்த நாள் பரிசு தராததால் வாக்குவாதம்: மூக்கில் மனைவி குத்தியதில் உயிரிழந்த கணவா்!

Next Post

கால்நடைத்துறையில் டாக்டர் பற்றாக்குறை;  சிவகங்கையில் அம்மை நோய் சிகிச்சைக்கு   சிக்கல்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கால்நடைத்துறையில் டாக்டர் பற்றாக்குறை;   சிவகங்கையில் அம்மை நோய் சிகிச்சைக்கு   சிக்கல்

கால்நடைத்துறையில் டாக்டர் பற்றாக்குறை;  சிவகங்கையில் அம்மை நோய் சிகிச்சைக்கு   சிக்கல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In