ஹைதராபாத்: நிலம், மது, மணலில் பல கோடி ரூபாய் கொட்டுகிறது என தெலுங்கானாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்., எம்.பி ராகுல் பேசினார்.
தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் பேசியதாவது: பணம் கொட்டும் துறைகளை சந்திரசேகர ராவ் குடும்பத்தினர் தன் கை வசம் வைத்திருப்பது ஏன்?. நிலம், மது, மணலில் பல கோடி ரூபாய் கொட்டுகிறது.
ஊழல் இல்லை என்றால் இந்த துறைகள் இவர்கள் தங்கள் கை வசம் வைத்திருக்க மாட்டார்கள். நிலம், மதுபானம், மணல் ஆகியவற்றில் அதிக அளவில் பணம் சம்பாதிக்கப்படுகிறது. இவ்வாறு ராகுல் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

