
மும்பை சர்வதேச விமானநிலையத்திற்கு வெடிகுண்டு அச்சுறுத்தலுடன் மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளதாகவும் அதில் வெடிவிபத்தைத் தவிர்க்க 1 மில்லியன் டாலர்கள் பிட்காயின்களாக கேட்டிருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சஹர் காவல்துறை அலுவலகத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விமான நிலையம் மும்பை இன்டர்நேஷனல் ஏர்போர்ட் லிமிட்டட் நிறுவனத்தால் இயக்கப்பட்டுவருகிறது. வியாழக்கிழமை காலை 11 மணியளவில் இந்த அச்சுறுத்தும் மின்னஞ்சல், வாடிக்கையாளர்கள் தங்கள் கருத்தை தெரிவிக்கும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் அந்த மின்னஞ்சலில் 48 மணி நேரத்தில் பணம் தராவிட்டால் விமான நிலையத்தின் இரண்டாம் முனையம் வெடித்துத் தகர்க்கப்படும் எனவும் மிரட்டல் விடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இதுதான் கடைசி எச்சரிக்கை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அடுத்த 24 மணிநேரத்தில் மற்றொரு எச்சரிக்கை அனுப்பப்படும் எனத் தெரிவித்துள்ளாதாக விமான நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர். கண்டுபிடிக்கப்படாத இந்த குற்றவாளியின் மீது 385 மற்றும் 505 ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


இந்த மிரட்டல் உருட்டல் இதற்கெல்லாம் அரசாங்கம் பயப்படக்கூடாது அப்படி என்னதான் கிழிக்கிறார்கள் என்பதை பார்ப்போம் இருப்பினும் நமது என் எஸ் ஜி எனப்படும் சிறப்பு கமெண்டோக்களை அதாவது நேஷனல் செக்யூரிட்டி கார்டு அவர்களை தயாராக வைத்திருக்க வேண்டும் வருவது வரட்டும் பார்ப்பதைபார்ப்போம்
இந்த மிரட்டல் உருட்டல் இதற்கெல்லாம் நம் அரசாங்கம் பயப்படக்கூடாது மிரட்டும் நபர்கள் என்னதான் கிழிக்கிறார்கள் என்பதை பார்ப்போம் நம்மிடம் என் எஸ் ஜி எனப்படும் நேஷனல் செக்யூரிட்டி கார்ட் அதாவது ராணுவத்தில் கைதேர்ந்த சிறப்பு படை உள்ளது அதை வைத்து பார்த்துக் கொள்ளலாம் மிரட்டல் செய்யும் நபர்களுக்கு அடி பணிந்து போகக்கூடாது