கொல்கத்தா : உலக கோப்பை கிரிக்கெட் பைனலை கொல்கத்தா , மும்பை நகரங்களில் வைத்திருந்தால் இந்தியா சாம்பியன் ஆகியிருக்கும் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
உலக கோப்பை கிரிக்கெட் பைனல் கடந்த 19-ம் தேதி குஜராத்தின் ஆமதாபாத்தில் நடைபெற்றது. இதில் இந்தியாவை ஆஸ்திரேலியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இது குறித்து காங்., எம்.பி., ராகுல், கிரிக்கெட்டில் இந்தியா தோற்றது ஒரு கெட்ட சகுனம் என பிரதமர் மோடியின் குஜராத் மாநிலத்தை மனதில் வைத்து விமர்சித்தார்.
இந்நிலையில் கொல்கத்தாவில் திரிணாமுல் காங்., கட்சியினர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் அம்மாநில முதல்வர் மம்தாபானர்ஜி பேசியது, உலக கோப்பை கிரிக்கெட் பைனலை குஜராத்தின் ஆமதாபாத் நகருக்கு பதிலாக கொல்கத்தாவில், அல்லது மும்பையில் நடத்திருந்தால் இந்தியா நிச்சயம் உலக சாம்பியன் ஆகியிருக்கும்.இதன் மூலம் கிரிக்கெட்டையும் காவிமயமாக்கும் முயற்சி நடந்துள்ளது என்றார்.


உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை சென்னையில் அதாவது வேளச்சேரியில் நான் ராஜலிங்கம் படித்த அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள மைதானத்தில் நடத்தியிருந்தால் கண்டிப்பாக இந்தியா ஜெயித்திருக்கும் இதில் எந்த மாற்றமும் கிடையாது அடுத்த முறை எந்த ஒரு உலக கோப்பை போட்டியிருந்தாலும் என்னை கேளுங்கள் நான் வேளச்சேரியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள மைதானத்தை தேர்ந்தெடுத்து தருகிறேன் வெற்றி நிச்சயம்