Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

தவறான மற்றும் பொய்யான விளம்பரங்கள் அனைத்தையும் உடனடியாக நிறுத்துங்கள், இல்லையேல் 1 கோடி அபராதம்..! – நீதிமன்றம் காட்டம்.

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 23, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
தவறான மற்றும் பொய்யான விளம்பரங்கள் அனைத்தையும் உடனடியாக நிறுத்துங்கள், இல்லையேல் 1 கோடி அபராதம்..! – நீதிமன்றம் காட்டம்.
23
SHARES
37
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

COVID-19 தொற்றுநோய் சமயத்தின் போது அலோபதி மருத்துவர்களை இழிவுபடுத்தும் முயற்சி குறித்து பாபா ராம்தேவ் மீது உச்ச நீதிமன்றம் செவ்வாயன்று கேள்வி எழுப்பியது. பதஞ்சலி ஆயுர்வேத் நிறுவனம் பல நோய்களுக்கான மருந்து தயாரிப்புகளின் விளம்பரங்களில் தவறான மற்றும் பொய்யான கூற்றுக்களை வெளியிடுவதற்கு எதிராக உச்ச நீதிமன்றம் எச்சரித்தது. மேலும் இது போன்ற பொய்யான கூற்றுக்களை வெளியிட்டால் ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்தனர்.

இந்திய FMCG மற்றும் ஆயுர்வேத பொருட்கள் விற்பனையில் சூறாவளி போல் வளர்ந்து வந்த பதஞ்சலி நிறுவனம் ஆரம்பம் முதல் பொருட்களின் தரம் முதல் அந்நிறுவனம் கொடுக்கும் வாக்குறுதிகள் மக்கள் மத்தியில் பெரும் விமர்சனங்களை பெற்று வந்தது. இதற்கிடையில் பதஞ்சலி நிறுவன பங்கு மதிப்பும் செபியின் பதிலுக்கு பின்பு சரிய துவங்கியது.

மரண தண்டனை கொடுத்தாலும் சரி.. பதஞ்சலி ஆயுர்வேத் தலைவர் பாபா ராம்தேவ் அதிரடி..!!

இந்த நிலையில் பாபா ராம்தேவ் தலைமையிலான பதஞ்சலி ஆயுர்வேத் புதன்கிழமை தனது தயாரிப்புகள் குறித்து தவறான விளம்பரங்களையோ அல்லது பிரச்சாரங்களையோ செய்யவில்லை என்றும், உச்ச நீதிமன்றம் அபராதம் விதித்தாலோ அல்லது எங்களுக்கு மரண தண்டனை கொடுத்தாலும் மறுக்க மாட்டோம் என்றும் கூறினார்.

எங்கள் மருந்துகளை பயன்படுத்தியோர் குறித்து எங்களிடம் ஒரு கோடிக்கும் அதிகமான மக்களின் தரவுகள், ஆதாரங்கள், முன்கூட்டிய மற்றும் மருத்துவ சான்றுகள் உள்ளது எனவும் பாபா ராம்தேவ் கூறினார்.

பதஞ்சலி நிறுவனத்தின் தயாரிப்புகள் ஆயிரக்கணக்கான மக்களின் பிபி, சுகர், தைராய்டு, ஆஸ்துமா, மூட்டுவலி, உடல் பருமன், கல்லீரல் மற்றும் சிறுநீரக செயலிழப்பு மற்றும் புற்றுநோய் போன்ற பல நோய்களிலிருந்து விடுவித்துள்ளது என்று இந்நிறுவனம் சார்பில் கூறப்பட்டு உள்ளது.

செவ்வாயன்று, நீதிபதி அஹ்சானுதீன் அமானுல்லா மற்றும் நீதிபதி பிரசாந்த் குமார் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இந்திய மருத்துவ சங்கத்தின் (IMA) மனுவை விசாரிக்கும் போது, ​​பதஞ்சலி ஆயுர்வேத் நிறுவனம் இதுப்போன்ற தவறான மற்றும் பொய்யான விளம்பரங்கள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இதுபோன்ற விதி மீறல்களை நீதிமன்றம் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ளும் என எச்சரித்தது.

தடுப்பூசி இயக்கம் மற்றும் நவீன மருந்துகளுக்கு எதிராக ராம்தேவ் அவதூறு பிரச்சாரம் செய்ததாக IMA மனு கொடுத்த நிலையில், இதன் மீது உச்ச நீதிமன்றம், ஆகஸ்ட் 23, 2022 அன்று, மத்திய சுகாதார அமைச்சகம் மற்றும் ஆயுஷ் அமைச்சகம் மற்றும் பதஞ்சலி ஆயுர்வேத் லிமிடெட் ஆகியவற்றிற்கு நோட்டீஸ் அனுப்பியது. இதை தொடர்ந்து செவ்வாய்க்கிழமை பதஞ்சலி நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்தது.

Previous Post

பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு காங்கிரஸ் அரசே பொறுப்பு: பிரதமர் மோடி

Next Post

பாஜகவின் கே.டி.ராகவன் ஒரு பெண்ணுடன் ஆபாசம் காட்டியபோது இந்த குஷ்பு எங்கே போயிருந்தார்.?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பாஜகவின் கே.டி.ராகவன் ஒரு பெண்ணுடன் ஆபாசம் காட்டியபோது இந்த குஷ்பு எங்கே போயிருந்தார்.?

பாஜகவின் கே.டி.ராகவன் ஒரு பெண்ணுடன் ஆபாசம் காட்டியபோது இந்த குஷ்பு எங்கே போயிருந்தார்.?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In