புதுடில்லி: யாரை முன்னிலைப்படுத்தவது என்பதை அவர்கள் தான் முடிவு செய்வார்கள் என ஜி 20 கூட்டத்தில் சீன அதிபர் பங்கேற்காதது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் வீீடியோ கான்ரன்சிங் வாயிலாக ஜி20 தலைவர்கள் உச்சி மாநாடு நேற்று(நவ.,23) நடந்தது. உச்சிமாநாட்டில் அனைத்து ஜி20 உறுப்பினர்கள், ஆப்ரிக்க ஒன்றியத்தின் தலைவர், ஒன்பது விருந்தினர் நாடுகள் மற்றும் 11 சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த உலகத் தலைவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தை சீனா அதிபர் ஜின்பிங் புறக்கணித்தார்.
இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியிருப்பதாவது: யாரை முன்னிலைப்படுத்தவது என்பதை அவர்கள் தான் முடிவு செய்வார்கள். இந்தியாவின் ஜி20 தலைமை வளர்ச்சியை கொண்டு வந்தது என்றார்.
மேலும் அவர் கூறுகையில், காசாவிற்கு நிவாரணப் பொருட்கள் அளிப்பதற்கு அனுமதி அளித்தது மற்றும் தற்காலிக போர் நிறுத்தத்தை ஜி20 உறுப்பினர்கள் வரவேற்கின்றனர். ஒட்டுமொத்தமாக பிணைக்கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

