பாரீஸ்: நேற்று ஓமனை சேர்ந்த ஹூத்தி அமைப்பினர் இஸ்ரேலிய சரக்கு கப்பலை கடத்தி ஆக்கிரமித்துள்ளனர். மேலும் அந்த அமைப்பு நாங்கள் எந்த இஸ்ரேலிய கப்பலையும் இந்த வழி வரும் பட்சத்தில் செல்ல அனுமதிக்க மாட்டோம் என்று எச்சரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில் இன்று அறிவித்துள்ள போர் நிறுத்தம் நேற்று ஹூத்தி அமைப்புகள் கப்பலை கடத்தியதாலா என்ற கேள்வி மக்களிடையே எழுந்து வருகிறது…
இது எப்படி இருக்க காசாவில் பிணைக்கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தம் மற்றும் மனிதாபிமான போர்நிறுத்தம் குறித்த அறிவிப்பை நான் வரவேற்கிறேன் என பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
காசாவில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக போர் நடைபெற்று வரும் சூழ்நிலையில் இஸ்ரேல் இன்று முதல்( நவ.,22) 4 நாட்கள் போர் நிறுத்தம் அறிவித்துள்ளது. இது குறித்து பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
காசாவில் பிணைக்கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தம் மற்றும் மனிதாபிமான போர்நிறுத்தம் குறித்த அறிவிப்பை நான் வரவேற்கிறேன். அனைத்து பிணைக்கைதிகளையும் விடுவிக்க நாங்கள் அயராது உழைத்து வருகிறோம். காசாவில் உள்ள பொதுமக்களை உதவிகள் வழங்கிட மனிதாபிமான போர் உதவிக்கரமாக இருக்கும். இவ்வாறு அந்த பதிவில் பிரான்ஸ் அதிபர் தெரிவித்துள்ளார்.

