குஜராத் மாநிலத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் மாநிலம் முழுவதும் சுமார் 40,000-க்கும்அதிகமான பெண்கள் காணாமல் போயுள்ளனர். இதில் அதிகபட்சமாக 2019-ம் ஆண்டு 9,268 பெண்கள் காணாமல் போயுள்ளனர்.
தேசிய குற்ற ஆவணக் காப்பகமான NCRB வெளியிட்டுள்ள தரவுகளின் படி, 2016-ம் ஆண்டில் 7,105 பெண்களும், 2017-ம் ஆண்டில் 7,712 பெண்களும், 2018-ம் ஆண்டில் 9,246 பெண்களும், 2019-ம் ஆண்டில் 9,268 பெண்களும் காணாமல் போயுள்ளனர். 2020-ம் ஆண்டில், 8,290 பெண்கள் காணாமல் போயுள்ளனர். மொத்த எண்ணிக்கை 41,621 ஆக உள்ளது.

