புதுடில்லி: வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தது. தொடர்ந்து சட்ட விரோத பணபரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14ம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர்.
இவர் சார்பில் பலமுறை ஜாமின் கேட்டும் கோர்ட் நிராகரித்து விட்டது. ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணையை வரும் 28ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

