Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

3 ஆண்டுகளாக கவர்னர் என்ன செய்தார்?: உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 20, 2023
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
3 ஆண்டுகளாக கவர்னர் என்ன செய்தார்?: உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி
14
SHARES
22
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

புதுடில்லி: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிரான வழக்கு விசாரணையை வரும் டிசம்பர் 1ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. விசாரணையின்போது, ‘3 ஆண்டுகளாக கவர்னர் என்ன செய்துகொண்டிருந்தார், எந்த முடிவும் எடுக்காமல் மசோதாக்களை கவர்னர் எப்படி நிலுவையில் வைத்திருக்க முடியும்? ‘ என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

தமிழக அரசுக்கும், கவர்னர் ரவிக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது. தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல், கவர்னர் காலம் தாழ்த்தி வருவதாக தமிழக அரசு குற்றஞ்சாட்டியது. கவர்னர் ரவிக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனுவில், ‛‛மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசின் அரசியல் எதிரியாக, கவர்னர் ரவி தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல், காலம் தாழ்த்தி வருகிறார். கவர்னரின் இந்த அதிகார துஷ்பிரயோகம், அரசியலமைப்புக்கு முரணானது‛‛ எனக் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் இன்று(நவ., 20) விசாரணைக்கு வந்தது.

தமிழக அரசு வாதம்

அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடுகையில், ”அனுப்பப்பட்ட மசோதாக்களை உரிய விளக்கம் இல்லாமல் கவர்னர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பி உள்ளார். ஒவ்வொரு முறையும் அரசை நிர்வகிக்க உச்சநீதிமன்றத்திற்கு வந்து கொண்டிருக்க முடியாது. 8 கோடி மக்களுக்கு பதிலளிக்கும் கடமை தங்களுக்கு உள்ளது” என்றார்.

ஒத்திவைப்பு

இதனையடுத்து நீதிபதிகள், ”3 ஆண்டுகளாக கவர்னர் என்ன செய்துகொண்டிருந்தார்? எந்த முடிவும் எடுக்காமல் மசோதாக்களை கவர்னர் எப்படி நிலுவையில் வைத்திருக்க முடியும்? உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பின் மசோதாக்களை திருப்பி அனுப்பியது ஏன்? மசோதாக்கள் தொடர்பாக கவர்னர் திருப்பி அனுப்பிய ஆவணங்கள் எங்கே?” என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர். பின்னர் வழக்கு விசாரணையை வரும் டிச.,1ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கேரள கவர்னருக்கு நோட்டீஸ்

கேரளா சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட, 8 மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காதது தொடர்பாக உரிய உத்தரவை பிறப்பிக்க வலியுறுத்தி கேரள அரசு தாக்கல் செய்த மனு இன்று (நவ.,20) விசாரணைக்கு வந்தது. அப்போது மனு மீது கவர்னர் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து வழக்கு விசாரணையை நவ.,24க்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

.

Previous Post

அர்ஜென்டினாவின் மத்திய வங்கியை அழித்து அமெரிக்க டாலரை அதிகாரப்பூர்வ நாணயமாக மாற்றுவேன் என்றவர் அதிபர் தேர்தலில் வெற்றி..!

Next Post

உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு கபில்தேவ் அழைக்கப்படாதது குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சனம்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு கபில்தேவ் அழைக்கப்படாதது குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சனம்!

உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு கபில்தேவ் அழைக்கப்படாதது குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சனம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In