விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்களின் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 25க்கும் மேலான படகுகள் எரிந்ததால் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

