ஆமதாபாத்: உலக கோப்பை போட்டியை காண ஆமதபாத் நரேந்திர மோடி மைதானத்திற்கு நேரில் உள்துறை அமைச்சர் அமித்ஷா வந்தார். களத்தில் இருக்கும் ரசிகர்கள் மற்றும் களத்தில் விளையாடும் இந்திய வீரர்களை பார்த்து மத்திய அமைச்சர் அமித்ஷா அசைத்தார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் பைனலை காண குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்தியா பேட்டிங் செய்து வருகிறது. இந்தியா அதிக ரன்களை குவிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் மைதானத்தில் ரசிகர்கள் கோஷங்கள் எழுப்பி வருகின்றனர்.
அதேநேரத்தில் மைதானத்தில் குவிந்த பிரபலங்கள் யார் என்பது தெரியுமா?. ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு, நடிகர் ஷாருக்கான், முன்னாள் இந்திய கேப்டன் சச்சின் டெண்டுல்கர், நடிகை தீபிகா படுகோனே உள்ளிட்ட பிரபலங்கள் உலகக்கோப்பை பைனலை நேரில் கண்டுகளித்து வருகின்றனர்.
மைதானத்திற்கு வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா களத்தில் விளையாடும் இந்திய வீரர்கள் மற்றும் ரசிகர்களை பார்த்து கை அசைத்தார். இந்த வீடியோ காட்சிகள் சமூகவலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
விறு விறுப்பாக நடந்த வரும் இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான கிரிக்கெட் போட்டியை இந்திய ரசிகர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் நேரில் கண்டுகளித்து வருகின்றனர். மைதானத்தில் ரசிகர்களின் கோஷம் விண்ணை பிளக்கிறது.
எதிர்பார்ப்பு
சில தினங்களுக்கு முன் உலக கோப்பை கிரிக்கெட் பைனலை பிரதமர் மோடி நேரில் காண உள்ளதாக தகவல் வெளியாகியது. இதனால் பிரதமர் மோடி பைனலை காண எப்பொழுது வருவார் என மைதானத்தில் குவிந்துள்ள ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது.


நம் நாட்டின் வளர்ச்சிக்கும் நம் நாட்டு மக்களின் வளர்ச்சிக்கும் முயற்சி செய்யாமல் அதாவது சிந்திக்காமல் கிரிக்கெட் போட்டியை வேடிக்கை பார்க்க வந்த வெத்து கூட்டங்கள்