Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

மோடி பிரதமரான பிறகு சர்வதேச அரங்கில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது: ராஜ்நாத் சிங்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 19, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
மோடி பிரதமரான பிறகு சர்வதேச அரங்கில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது: ராஜ்நாத் சிங்
11
SHARES
17
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram
rajnath_singh_minister

நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமரான பிறகு சர்வதேச அரங்கில் இந்தியாவின் மதிப்பு பலமடங்கு உயர்ந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தானில் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசையும் அவர் தாக்கிப் பேசினார்.

ராஜஸ்தானின் ஷாபூரா தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் ராஜ்நாத் சிங் பேசியதாவது, “ராஜஸ்தானில் சட்டம் ஒழுங்கு நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.

அசோக் கெலாட் தலைமையிலான அரசில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை. நமது தாய்மார்களுக்கும், சகோதரிகளுக்கும் பாதுகாப்பு அளிக்க முடியாதவர்கள் ஆட்சி நடத்துவதற்கே தகுதி இல்லாதவர்கள். தேர்தல் அரசை அமைப்பதற்கு மட்டுமல்ல, சமூகத்தையும், நாட்டையும் வடிவமைப்பதற்கும் முக்கியமானவை ஆகும்.

ஒரு அரசாங்கமானது ஜாதி, மத அடிப்படையில் நடத்தப்படாமல், மனிதநேய அடிப்படையில் மட்டுமே நடத்தப்பட வேண்டும். மோடி தலைமையிலான அரசு அந்தவகையில் நடத்தப்படுகிறது.

மோடி பிரதமரான பிறகு இந்தியாவின் மதிப்பு சர்வதேச அரங்கில் பலமடங்கு உயர்ந்துள்ளது” என்று பேசினார்.

200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு நவம்.25-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியான பாஜக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. டிசம்.3-ஆம் தேதி இதற்கான வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

.

Previous Post

பிரபஞ்ச அழகி பட்டம் வென்றார் நிகராகுவா பெண்..!

Next Post

உலக கோப்பை பைனல்: மைதானத்திற்கு வந்த அமித்ஷா உள்ளிட்ட பிரபலங்கள்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
உலக கோப்பை பைனல்: மைதானத்திற்கு வந்த அமித்ஷா உள்ளிட்ட பிரபலங்கள்

உலக கோப்பை பைனல்: மைதானத்திற்கு வந்த அமித்ஷா உள்ளிட்ட பிரபலங்கள்

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    சும்மா பொய் சொல்லாதீங்க அப்புறம் எதற்கு இந்தியாவின் கடன் தொகை அதிகரித்து உள்ளது இந்தியாவின் டாலர் மதிப்பு ஏன் டாலர் மதிப்பில் இந்தியாவின் பணம் ஏன் இவ்வளவு பாதாளத்தில் உள்ளது. ராஜ்நாத் சிங் அவர்களே வரும் பாராளுமன்ற தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு பொய்யாக பேசிக்கொண்டு இருக்கக் கூடாது உண்மையிலேயே நாட்டின் கருத்தையும் மக்களின் கருத்தையும் உயர்த்த முயற்சி செய்யுங்கள்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In