சான்சால்வடார்: நிகராகுவா நாட்டை சேர்ந்த ஷென்னிஸ் பலாசியஸ் என்ற பெண் 2023ம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி பட்டம் வென்றுள்ளார்.
72வது உலக பிரபஞ்ச அழகிப்போட்டி எல் சால்வடார் நாட்டில் நடந்தது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 90 பெண்கள் பங்கேற்றனர். இந்திய சார்பில் ஸ்வேதா ஷர்தா (வயது 23) பங்கேற்றார்.
நிகராகுவா, ஆஸ்திரேலியா மற்றும் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண்கள் இறுதி மூன்று இடங்களுக்கு நுழைந்தனர். இதையடுத்து, நிகராகுவா நாட்டை சேர்ந்த ஷென்னிஸ் பலாசியஸ் என்ற பெண் 2023ம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி பட்டம் வென்றுள்ளார்.


அழகி போட்டியில் ஜெயித்தது வேறு நாட்டுப் பெண் என்றாலும் நம் நாட்டு சார்பாக இந்த போட்டியில் கலந்து கொண்டு கடுமையான முயற்சி செய்து தோற்றாலும் நம் இந்தியாவைப் பொறுத்தவரை சுவேதா அவர்களை பாராட்டாமல் இருக்க முடியாது வெற்றி தோல்வி என்பது தனி. போட்டியில் கலந்து கொண்டு வெற்றியை பெறுவதற்கு கடுமையாக முயற்சி செய்வதும் ஒரு வகை வெற்றியே அதை தோல்வி என்று சொல்லக்கூடாது