காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் அருகே தேசிகர் சுவாமி முன்பு பிரபந்தம் பாடுவதில் வடகலை – தென்கலை பிரிவினர் இடையே தகராறு ஏற்பட்டது. சுவாமி உலாவின் போது தென்கலை பிரிவினர் பிரபந்தம் பாட வடகலை பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்தனர்.. போலீசார், அறநிலையத்துறை அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தி இரு தரப்பினரும் பிரபந்தம் பாட அனுமதி அளித்த பிறகு சுவாமி உலா போலீசார் பாதுகாப்புடன் நடைபெற்றது.


