Wednesday, November 4, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் நடிகை விஜயசாந்தி!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 17, 2023 - Updated on November 18, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் நடிகை விஜயசாந்தி!
57
SHARES
92
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram
Vijayashanti

நடிகை விஜயசாந்தி, பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

தென்னிந்தியாவின் முன்னணி நடிகையான விஜயசாந்தி, கடந்த 1998-ஆம் ஆண்டு முதல்முறையாக பாஜகவில் இணைந்து தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். பாஜக மகளிர் அணிச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளும் அவருக்கு வழங்கப்பட்டது.

தொடர்ந்து, பாரதிய ராஷ்டிர சமிதி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு மாறிய விஜயசாந்தி, 2020-ஆம் ஆண்டு மீண்டும் தாய் கட்சியான பாஜகவில் இணைந்தார்.

இதனிடையே, தெலங்கானாவில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விஜயசாந்திக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதால், அவர் பாஜகவில் இருந்து விலக திட்டமிட்டுள்ளதாக கடந்த சில நாட்களாக செய்திகள் பரவி வந்தன.

அதன்படி, நடிகை விஜயசாந்தி, பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இன்று இணைந்தார்.

119 தொகுதிகளைக் கொண்ட தெலங்கானா சட்டப்பேரவைக்கு வரும் நவ.30ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் பிஆர்எஸ், காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

.

Previous Post

ரேஷன் கடைகள் மூலம் ரூ.1000 கோடி ஊழல்: அமித் ஷா குற்றச்சாட்டு!

Next Post

வெல்ல முடியாததால் சதி செய்கிறது பாஜக: அரவிந்த் கேஜரிவால்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
வெல்ல முடியாததால் சதி செய்கிறது பாஜக: அரவிந்த் கேஜரிவால்

வெல்ல முடியாததால் சதி செய்கிறது பாஜக: அரவிந்த் கேஜரிவால்

Comments 1

  1. ராஜலிங்கம் சென்னை says:
    3 years ago

    நடிகை விஜயசாந்தி ஒரு எம்எல்ஏ சீட்டுக்காக வரும் தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு கட்சி மாறியுள்ளார். ஏற்கனவே பல கட்சிகளுக்கு மாறியவர் இந்த தேர்தலில் இவருக்கு எம்எல்ஏ சீட் கிடைக்காவிட்டாலோ அல்லது கிடைத்தும் வெற்றி பெறர விட்டாலோ வேறு கட்சிக்கு மாறிவிடுவார் இது சாதாரணமாக அரசியல்வாதிகளிலேயே உனக்கும் ஒரு சம்பவமே

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In