Wednesday, November 4, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

பரவும் ‘டீப் பேக்’ வீடியோக்கள்: பிரதமர் மோடி கவலை

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 17, 2023
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
பரவும் ‘டீப் பேக்’ வீடியோக்கள்: பிரதமர் மோடி கவலை
22
SHARES
36
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

புதுடில்லி: நடிகைகள் உள்ளிட்ட சிலரின் முகங்களை போலியாக சித்தரித்து பரப்பப்படும் ‘டீப் பேக்’ வீடியோக்கள் குறித்து பிரதமர் மோடி கவலை தெரிவித்துள்ளார். ‘தொழில்நுட்பம் பொறுப்புடன் கையாளப்பட வேண்டும் எனவும், ஊடகங்கள் இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்’ என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

சமீபத்தில் ஒருவரது ஆபாசமான வீடியோவில், நடிகை ராஷ்மிகா மந்தனாவின் முகத்தை மட்டும் ‘ஏஐ’ எனப்படும் செயற்கை தொழில்நுட்பம் மூலம், ‘மார்பிங்’ செய்து சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது. இதற்கு பல சினிமா பிரபலங்களும் கண்டனங்களைத் தெரிவித்தனர். வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து ‘டைகர்-3’ படத்தில் நடித்த பாலிவுட் நடிகை கத்ரினா கைப்பை, அப்படத்தில் வரும் காட்சியை ஆபாசமாக சித்தரித்து பரப்பப்பட்டது. தற்போது மற்றொரு பாலிவுட் நடிகையான கஜோலை ஆபாசமாக சித்தரித்தும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

latest tamil news

‘டீப் பேக்’ எனப்படும் இந்த போலியாக சித்தரிக்கப்படும் வீடியோக்களை தடுக்க வேண்டும் என பல தரப்பில் இருந்தும் குரல்கள் எழுகின்றன.

இந்த நிலையில் டில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கூறியதாவது: நான் கார்பா நடனம் ஆடியது போன்ற ஒரு வீடியோவை சமீபத்தில் பார்த்தேன். இதுபோன்ற பல வீடியோக்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன. ஆனால் பள்ளியிலிருந்தே நான் கர்பா நடனமாடியதில்லை. இதுபோன்ற போலி வீடியோக்கள் மிகவும் கவலை அளிக்கின்றன.

இது குறித்து ‘சாட் ஜிபிடி’ குழுவினருடன் பேசி, எச்சரித்துள்ளேன். செயற்கை நுண்ணறிவு செயலி மூலம் இதுபோன்ற வீடியோக்கள் தயாரிக்கப்படுகின்றன. தொழில்நுட்பம் பொறுப்புடன் கையாளப்பட வேண்டும். ஊடகங்கள் இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

.

Previous Post

புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து அருணை பொறியியல் கல்லூரி கட்டுமானம் – ஹைகோர்ட் அதிரடி உத்தரவு..!

Next Post

சத்தீஸ்கர், ம.பி. தேர்தல்: பிற்பகல் 3 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சத்தீஸ்கர், ம.பி. தேர்தல்: பிற்பகல் 3 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

சத்தீஸ்கர், ம.பி. தேர்தல்: பிற்பகல் 3 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In