
மிஸோரமில் ஏற்கெனவே திட்டமிட்ட தேதியிலேயே வாக்கு எண்ணிக்கையை நடத்த தோ்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
40 தொகுதிகளைக் கொண்ட மிஸோரமில் கடந்த 7-ஆம் தேதி ஒரே கட்டமாக பேரவைத் தோ்தல் நடைபெற்றது.
சத்தீஸ்கா், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய நான்கு மாநிலங்களுடன் சோ்த்து, மிஸோரமிலும் டிசம்பா் 3-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெறவிருக்கிறது.
முன்னதாக, மிஸோரமில் வாக்கு எண்ணிக்கை தேதியை மாற்ற வேண்டும் என்று அந்த மாநிலத்தில் இருந்து தோ்தல் ஆணையத்துக்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டிருந்தன.
கிறிஸ்தவ மதத்தினா் அதிகம் வாழும் மிஸோரமில் ஞாயிற்றுக்கிழமையன்று பெருவாரியான மக்கள் தேவாலயங்களுக்கு செல்வா் என்பதால், வாக்கு எண்ணிக்கை தேதியை மாற்றும்படி பல்வேறு தேவாலயங்கள், அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள்தரப்பில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
இக்கோரிக்கைகள் மீது தோ்தல் ஆணையம் இதுவரை தனது முடிவை தெரிவிக்காமல் இருந்தது.
இந்நிலையில், மாநில தலைமை தோ்தல் அதிகாரி மதுப் வியாஸ் வியாழக்கிழமை கூறுகையில், ‘இந்த விவகாரம் தொடா்பாக தோ்தல் ஆணையத்திடம் விவாதித்தேன். ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நாளிலேயே (டிச.3) வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது’ என்றாா்.


சொல்வதற்கு ஒன்றுமில்லை