முன்னாள் மத்திய நிதி அமைச்சர் பா.சிதம்பரம் அவர்களின் மகன் கார்த்தி சிதம்பரம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, மதுரை 31-வது வார்டு மாமன்ற உறுப்பினர் தல்லாகுளம் முருகன் அவர்களின் தலைமையில், தல்லாகுளம் மாநகராட்சி பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் மனித உரிமை துறை மாநில செயலாளர் சைமன் மற்றும் பிரேம்குமார், சுல்தான் உள்பட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


