Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

‘அதானியின் பாக்கெட்டுகளுக்கு பணத்தை மாற்றுகிறது பாஜக’ – ராகுல் காந்தி

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 16, 2023
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
நாட்டின் ஊழல்களின் தலைநகரமாக ம.பி. மாறியுள்ளது: ராகுல் காந்தி
11
SHARES
17
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram
rahul2

பாஜக பணத்தை அதானியின் பாக்கெட்டுகளுக்கு மாற்றுகிறது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

ராஜஸ்தானில் சுரு பகுதியில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய ராகுல் காந்தி, ‘நாட்டில் கறுப்புப் பணம் ஒழிக்கப்படவில்லை என்றால் என்னை தூக்கிலிடுங்கள் என்று பிரதமர் மோடி கூறினார். கரோனா காலத்தில் ஆக்சிஜன், மருந்துகள் இல்லாமல் ஒருபக்கம் மக்கள் செத்துக்கொண்டிருக்கும்போது, மொபைல் போனில் டார்ச் விளக்கை எரிய விடும்படியும் பாத்திரங்களை தட்டும்படியும் கூறினார்.

ஆனால் ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசு மக்களுக்குத் தேவையான உணவு, மருந்துகளை வழங்கி வந்தது. இதனால் நோயாளிகள் மீண்டு வந்தனர். ஏனெனில் காங்கிரஸ் அரசு ஏழைகளுக்கான அரசு. ஏழைகள், விவசாயிகள், தொழிலாளர்களுக்காக நாங்கள் ஆட்சி நடத்துகிறோம். நாங்கள் ஏழைகளை பாதுகாக்கிறோம். ஆனால் அவர்கள்(பாஜக) ஜிஎஸ்டியை கொண்டு வந்து முதல்முறையாக விவசாயிகளை வரி கட்ட வைத்தார்கள். பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கொண்டு வந்து சிறு வியாபாரிகளை முடக்கினார்கள்.

காங்கிரஸின் பணி என்பது ஏழைகளின் பைகளில் பணத்தை நிரப்புவது. ஆனால் அவர்கள் அதானியின் பைகளில் பணத்தை நிரப்புகிறார்கள். அதானியின் வணிகத்துக்கு உதவுகிறார்கள். அவர் மேலும் மேலும் பணம் சம்பாதிக்கவும் அந்த பணத்தை அவர் வெளிநாடுகளில் முதலீடு செய்யவும் உதவுகிறார்கள்’ என்று பேசினார்.

மேலும் ராஜஸ்தானில் காங்கிரஸ் தலைவர்கள் ஒற்றுமையுடன் இருப்பதாகவும் வரும் தேர்தலிலும் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைப் பிடித்து பாஜகவை துடைத்தெறியும் என்றும் தெரிவித்தார்.

.

Previous Post

வாயை பிளக்க வைக்கும் பாஜகவின் இலவசங்கள் நிறைந்த தேர்தல் அறிக்கை!!! – கேஸ் சிலிண்டருக்கு ரூ.450 மானியம்.. இன்னும் ஏராளம்..!

Next Post

புதிய 4D திரையரங்கால் கலக்கும் திருச்சி அண்ணா கோளரங்கம்..!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
புதிய 4D திரையரங்கால் கலக்கும் திருச்சி அண்ணா கோளரங்கம்..!

புதிய 4D திரையரங்கால் கலக்கும் திருச்சி அண்ணா கோளரங்கம்..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In