வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் 
அம்பிகாபூர்: பாஜ., மற்றும் காங்கிரஸ் இடையே என்ன வித்தியாசம்? என்பது குறித்து சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பாஜ., தேசிய தலைவர் நட்டா விளக்கம் அளித்தார்.
சத்தீஸ்கர் மாநிலம் அம்பிகாபூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் நட்டா பேசியதாவது: ஒரு பக்கம் பா.ஜ., மற்றொரு பக்கம் ஊழல் காங்கிரஸ். பாஜ., என்றால் வளர்ச்சி, பெண்களுக்கு அதிகாரம், விவசாயிகளின் நலனுக்காக செயல்படுவது ஆகும். 2ஜி ஊழல், நிலக்கரி ஊழல் போன்றவை காங்கிரஸ் காலத்தில் நடந்ததா? இல்லையா?. உங்கள் அனைவரையும் நான் கேட்க விரும்புகிறேன்?.
காங்கிரஸ் கட்சி என்றால் கொள்ளையடிப்பதும் ஏமாற்றுவதும் தான். சத்தீஸ்கர் மக்களின் முன்னேற்றம் மற்றும் செழிப்பை உறுதி செய்வதில் பாஜ., உறுதியாக உள்ளது. பூபேஷ் பாகேல் ஆட்சியை விரட்டியடிக்க மக்கள் முடிவு செய்துள்ளனர். மாநிலத்தின் அனைத்துத் துறை வளர்ச்சிக்காக பாஜ., ஆட்சி அமைக்க உள்ளது. இவ்வாறு நட்டா பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

