போபால் :”மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில், 150 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும்,” என, அக்கட்சி எம்.பி., ராகுல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ம.பி.,யில், மொத்தமுள்ள, 230 சட்டசபை தொகுதிகளுக்கு, வரும் 17ல் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலில், ஆளும் பா.ஜ., – எதிர்க்கட்சியான காங்., இடையே இரு முனை போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், ம.பி.,யின் விதிஷா மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில், காங்., வேட்பாளர்களை ஆதரித்து, அக்கட்சி எம்.பி., ராகுல் பேசியதாவது:
ம.பி.,யில் ஐந்து ஆண்டுகளுக்கு முன், காங்., அரசை மக்கள் தேர்ந்தெடுத்தனர். இதை பொறுத்துக் கொள்ள முடியாத நரேந்திர மோடி, அமித் ஷா, சிவ்ராஜ் சிங் சவுகான் ஆகியோர், எம்.எல்.ஏ.,க்களை விலைக்கு வாங்கி, எங்களை அரசை கவிழ்த்து விட்டனர்.
குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடித்த பா.ஜ.,வால், ம.பி.,யில் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஹிமாச்சல், கர்நாடகாவில் ஆட்சியை பிடித்தது போல், ம.பி., சட்டசபை தேர்தலிலும், காங்., வெற்றி பெறும். 145 – 150 இடங்களை கைப்பற்றி, தனிப் பெரும்பான்மையுடன் காங்., ஆட்சியை அமைக்கும். .இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

