வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் 
வாஷிங்டன்: அமெரிக்கா சென்றுள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், டெஸ்லா தொழிற்சாலையை பார்வையிட்டு அங்கு பணியாற்றிய இந்திய பொறியாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, உடல்நலக்குறைவு காரணமாக தொழிற்சாலைக்கு வந்து பியூஷ் கோயலை சந்திக்க முடியாமல் போனதற்கு, அதன் உரிமையாளர் எலான் மஸ்க் மன்னிப்பு கேட்டுள்ளார்.
மின்சார கார் தயாரிப்பில் உலகளவில் முன்னணியில் இருக்கும் டெஸ்லா தொழிற்சாலை அமெரிக்காவின் கலிபோர்னியாவின் ப்ரீமோன்ட் நகரில் அமைந்துள்ளது. இதன் உரிமையாளர் எலாஸ் மஸ்க். இவர் தான், டுவிட்டர் சமூக வலைதளத்தையும் வாங்கியுள்ளார்.

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ்கோயல், டெஸ்லா தொழிற்சாலையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, அங்கு பணியாற்றும் இந்திய பொறியாளர்கள் மற்றும் நிதி வல்லுநர்களுடன் கலந்துரையாடினார்.

இது தொடர்பாக ‛எக்ஸ்’ சமூக வலைதளத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: டெஸ்லா தொழிற்சாலையை பார்வையிட்டேன். அங்கு திறமையான இந்தியப் பொறியாளர்கள் மற்றும் நிதி வல்லுநர்கள் உயர் பதவிகளில் பணிபுரிவதைக் கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். டெஸ்லாவின் செயல்பாடுகளை மாற்றியமைக்கும் குறிப்பிடத்தக்க பயணத்தில் இந்தியர்கள் பங்களிக்கின்றனர்.

டெஸ்லா மின்சார வாகன விநியோக சங்கிலியில் இந்தியாவில் இருந்து ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் சப்ளையர்களின் முக்கியத்துவத்தைப் பார்த்து பெருமிதம் கொள்கிறோம். இந்தியாவில் இருந்து அதன் உதிரிபாகங்கள் இறக்குமதியை இரட்டிப்பாக்கும் பயணத்தில் டெஸ்லா உள்ளது. மேலும் இந்த தருணத்தில் எலான் மஸ்க் உடனான சந்திப்பை தவற விட்டுவிட்டேன். விரைவில் அவர் குணமடைய வாழ்த்துகிறேன்” எனக்கூறியிருந்தார்.
இதற்கு எலான் மஸ்க் வெளியிட்ட பதில் பதிவில் கூறியுள்ளதாவது: ‛‛ டெஸ்லா தொழிற்சாலையை பார்வையிட்டது பெருமை அளிக்கிறது. கலிபோர்னியாவுக்கு நேரில் வர முடியாமல் போனதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ஆனால், எதிர்காலத்தில் உங்களை சந்திக்க காத்திருக்கிறேன்” எனக்கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

