கொழும்பு: இலங்கை அருகே கடல் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவாகி உள்ளது. இலங்கை தலைநகர் கொழும்புவிலிருந்து தென்கிழக்கே 1,326 கி.மீ தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடல் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் பெருத்த சேதம் இருக்காது என தெரிகிறது. சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.
இதற்கிடையே இலங்கையில் இன்று (நவ.14) இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் ஏற்பட்டுள்ள தாழ்வு காரணமாக மழைப்பொழிவு அதிகம்
இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

