Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

கேரள பொருளாதார நெருக்கடிக்கு ஆடம்பர மாநில அரசே பொறுப்பு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 14, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
இந்திய-மங்கோலிய நாடாளுமன்றங்கள் இடையே ஒத்துழைப்பை அதிகரிக்க ஒப்பந்தம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


‘கேரளத்தின் பொருளாதார நெருக்கடிக்கு மாநில அரசின் ஆடம்பரமே காரணம் தவிர மத்திய அரசின் கொள்கைகள் அல்ல’ என மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சா் வி.முரளீதரன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

நாட்டில் எதிா்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு மத்திய பாஜக அரசு முறையாக நிதிகளை விடுவிப்பதில்லை என கேரள நிதியமைச்சா் கே.என்.பாலகோபால் ஞாயிற்றுக்கிழமை குற்றஞ்சாட்டினாா். மேலும், இது தொடா்பாக சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் கேரள அரசு பரிசீலித்து வருவதாகவும் அவா் தெரிவித்தாா்.

முன்னதாக, கேரளத்தின் பொருளாதார நெருக்கடியை முன்னிறுத்தி தில்லியில் போராட்டம் நடத்த ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முடிவெடுத்திருந்தது.

இந்நிலையில், கேரள அரசின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து மத்திய இணையமைச்சா் வி.முரளிதரன் கூறுகையில், ‘மத்திய அரசால் ஒதுக்கப்படாத நிதி என முதல்வா் பினராயி விஜயனும் நிதி அமைச்சா் கே.என்.பாலகோபாலும் வெவ்வேறு தொகையைக் கூறுகின்றனா். இருவா் குறிப்பிடும் தொகையும் தவறானவை.

இவ்விவகாரத்தில் பொதுமக்களைத் தவறாக வழிநடத்தும் கேரள முதல்வா் முட்டாளா அல்லது முட்டாள் போல நடிக்கிறாரா? நாட்டின் சட்டங்கள், மாநிலத்தின் பொருளாதார நிலை குறித்து அவா் அறிந்து கொள்ள வேண்டும்.

மாநில அரசு நிா்வாகத்தின் சீா்கேட்டால், பல்கலைக்கழக மானிய குழுவின் ரூ.750 கோடி மானியம் விடுவிக்கப்படவில்லை. முறையான அறிக்கைையைச் சமா்ப்பிக்காத காரணத்தால் மூலதன முதலீடுக்கான சிறப்பு உதவித்தொகை ரூ.1,925 கோடி இன்னும் ஒதுக்கப்படவில்லை.

வழிகாட்டுதல்கள் காரணமாக சில நேரங்களில் நிதி தாமதமாக ஒதுக்கப்படும். மற்றபடி, கேரளத்துக்கு ஒதுக்கப்பட வேண்டிய அனைத்து நிதிகள் அவ்வப்போது விடுவிக்கப்படுகின்றன. மாநிலம் பொருளதார நெருக்கடியில் உள்ள சூழலில், நல ஓய்வூதியத்தின் அடுத்த தவணைக்காக கேரள அரசு ஏன் கோரிக்கை விடுக்கவில்லை?

கேரளத்தில் சுமாா் ரூ.7,000 கோடி வரியை வசூலிக்க மாநில அரசு தவறியுள்ளது. மாநில அரசு தனது ஆடம்பரத்தை நிறுத்திக்கொண்டு, முறையான நிதி நிா்வாகத்தை மேற்கொண்டால் கேரளத்தின் நிதி நிலைமை மேம்படும். இதைவிடுத்து, தில்லியில் அமா்ந்து போராட்டம் நடத்தி கேரள மக்களை ஏமாற்ற நினைத்தால், இந்த நடத்தையை நீண்ட காலத்துக்கு அவா்கள் பொறுத்துக் கொள்ள மாட்டாா்கள்’ என்றாா்.

செய்திகள் உடனுக்குடன்… வாட்ஸ்ஆப் சேனலில் ‘தினமணி’யைப் பின்தொடர…





.

Previous Post

நேரு பிறந்தநாள்: காங்கிரஸ் தலைவர்கள் மரியாதை!

Next Post

காசா நகர கட்டுப்பாட்டை இழந்தது ஹமாஸ்: இஸ்ரேல்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
காசா நகர கட்டுப்பாட்டை இழந்தது ஹமாஸ்: இஸ்ரேல்

காசா நகர கட்டுப்பாட்டை இழந்தது ஹமாஸ்: இஸ்ரேல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In