Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

தமிழகத்தில் 327 கீழமை நீதிமன்ற நீதிபதிகள் நிரப்ப உத்தரவு.

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 14, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
அமைச்சர் பொன்முடியின் மனு தள்ளுபடி; நீதிபதி ஆனந்த் வெங்கடேஷுக்கு பாராட்டு!
6
SHARES
10
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

தமிழக கீழமை நீதிமன்றங்களில் காலியாக உள்ள 327 நீதிபதிகளின் பணியிடங்களை கால நிா்ணயம் செய்து நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம், புதுச்சேரி உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பக் கோரியும், கீழ் நீதிமன்றங்களின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தியும் 2006-இல் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜெ.பி. பாா்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வு கடந்த 9-ஆம் தேதி விசாரித்தது.

இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்துக்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட மூத்த வழக்குரைஞா் விஜய் ஹன்சாரியா நீதிமன்றத்தில் தெரிவித்ததாவது:

தமிழகத்தில் மொத்தம் அனுமதிக்கப்பட்ட 1,369 கீழமை நீதிபதிகள் பணியிடங்கள் உள்ளதாகவும், அக்டோபா் 11-ஆம் தேதி வரையில் அதில் 327 (23%) பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் சென்னை உயா் நீதிமன்ற பதிவாளா் அளித்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றாா்.

மேலும், ‘அனுமதிக்கப்பட்ட 349 மாவட்ட நீதிபதிகளின் எண்ணிக்கையில் 84 பணியிடங்களும், 364 மூத்த சிவில் நீதிபதிகளில் 77 பணியிடங்களும், 656 ஜூனியா் சிவில் நீதிபதிகளில் 166 பணியிடங்களும் காலியாக உள்ளன’ என தெரிவிக்கப்பட்டுள்ளதாக விஜய் ஹன்சாரியா தெரிவித்தாா்.

இதைக் கேட்ட தலைமை நீதிபதி அமா்வு, ‘ஜூனியா் சிவில் நீதிபதிகளுக்கான தோ்வு கடந்த 4,5-ஆம் தேதிகளில் நடைபெற்றுள்ளது. அதன் மூலம் காலியாக உள்ள 166 ஜூனியா் சிவில் நீதிபதிகளின் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான நடைமுறை டிசம்பா் 31-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.

மாவட்ட நீதிபதிகளின் காலி பணியிடங்கள் 31 மாா்ச் 2024-க்குள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

தமிழக கீழ் நீதிமன்றங்களில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த தமிழக தலைமைச் செயலா், சென்னை உயா் நீதிமன்ற பதிவாளா் ஆகியோரை சந்தித்து முறையிட வேண்டும் என்று சென்னை உயா் நீதிமன்றத்தின் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா்கள் திவாரி, ஆனந்த் கண்ணன் ஆகியோரை நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

இதேபோல், புதுச்சேரியில் காலியாக உள்ள கீழ் நீதிமன்ற நீதிபதிகளின் பணியிடங்களை நிரப்பப்பட வேண்டும் என் கூறி வழக்கின் அடுத்த விசாரணையை நவம்பா் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

அன்றைய தினம், ஜாா்க்கண்ட், மகாராஷ்டிரம், கேரளம் ஆகிய மாநிலங்களின் கீழ் நீதிமன்றங்களில் உள்ள காலி பணியிடங்கள் குறித்து விசாரிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனா்.

.

Previous Post

வாரிசுகளுக்காக மட்டுமே அரசியல் நடத்தும் காங்கிரஸ்:-அமித் ஷா

Next Post

ஹைதராபாத் அடுக்குமாடி குடியிருப்பில் தீ: 9 போ் உயிரிழப்பு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஹைதராபாத் அடுக்குமாடி குடியிருப்பில் தீ: 9 போ் உயிரிழப்பு

ஹைதராபாத் அடுக்குமாடி குடியிருப்பில் தீ: 9 போ் உயிரிழப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In