புதுடில்லி: மக்கள் விடுதலைப் படை உள்ளிட்ட 9 மணிப்பூர் பிரிவினைவாத அமைப்புகளுக்கு 5 ஆண்டுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
மணிப்பூரில் மெய்டி, கூகி இன பிரிவினருக்கு இடையே கடந்த மே 3ம் தேதி கலவரம் வெடித்தது. 6 மாதங்களுக்கு மேலாகியும் அங்கே வன்முறை சம்பவங்கள் முற்றிலுமாக ஓயவில்லை. வன்முறையைக் கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில், இந்தியாவின் இறையாண்மையை பின்பற்றவில்லை என்பதால் மணிப்பூரை சேர்ந்த 9 அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, மக்கள் விடுதலை ராணுவம்(PLA) மற்றும் அதன் அரசியல் பிரிவு, புரட்சிகர மக்கள் முன்னணி (RPF) ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி (UNLF) மற்றும் அதன் ஆயுதப் பிரிவான மணிப்பூர் மக்கள் ராணுவம் ஆகிய அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

