ஐதராபாத்: பிரதமரின் மாநிலத்தில் கூட 24 மணி நேர மின்சார வசதி இல்லை. ஆனால் நாங்கள் தெலுங்கானாவில் நல்ல மின்சார வசதி செய்து தருகிறோம் என தெலுங்கானா சந்திரசேகர ராவ் கூறினார்.
தெலுங்கானாவில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் பாரத் ராஷ்ட்ர சமிதி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, 119 சட்டசபை தொகுதிகளுக்கு, வரும், 30ல் தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில் 2 தொகுதிகளில் போட்டியிடும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். நிகழ்ச்சி ஒன்றில் சந்திரசேகர ராவ் பேசியதாவது:
தெலுங்கானா மாநிலம் உருவானபோது மின்சாரப் பிரச்னை, குடிநீர் பிரச்னை எனப் பல பிரச்னைகள் இருந்தன. ஆனால் பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சி உருவான பிறகு மின்சாரப் பிரச்னைகள் தீர்ந்தன. தெலுங்கானா மாநிலத்தில் நாங்கள் நல்ல மின்சார வசதி செய்து தருகிறோம். பிரதமரின் மாநிலத்தில் கூட 24 மணி நேர மின்சார வசதி இல்லை. தொலைதூர பகுதிகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

