வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் 
போபால்: ம.பி.,யில் பல ஆண்டுகள் ஆட்சி செய்தபோது ஓ.பி.சி.,யை சேர்ந்த எத்தனை பேரை பிரதமராக்கினீர்கள், முதல்வர் ஆக்கினீர்கள் என காங்கிரஸ் எம்.பி., ராகுலுக்கு அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கேள்வி எழுப்பியுள்ளார்.
காங்கிரஸ் எம்.பி., ராகுல், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என குரல் எழுப்பி வருகிறார். அதேபோல், பா.ஜ., அரசு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை (ஓ.பி.சி) சேர்ந்தவர்களை முதல்வராக்குவோம் எனவும், பா.ஜ., அரசு ஓ.பி.சி.,யினருக்கு எதுவும் செய்யவில்லை என்றும், பிரசாரம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கூறியதாவது: இண்டியா கூட்டணியை சேர்ந்தவர்கள் சனாதன தர்மத்தை அவமதித்தபோது, ஏன் மவுனம் காத்தீர்கள் என்று நான் ராகுலிடம் கேட்க விரும்புகிறேன். மவுனமாக இருப்பதால் அவர்களின் கருத்தை நீங்கள் ஏற்பதாக எடுத்துக்கொள்ளலாமா?
மத்திய பிரதேசத்தில் காங்., கட்சி பல ஆண்டுகள் ஆட்சி செய்தது. அதில் எத்தனை ஓ.பி.சி.,க்களை பிரதமராக்கினார்கள்? எந்த ஓ.பி.சி.,யை சேர்ந்தவரை ம.பி., முதல்வர் ஆக்கினீர்கள் என்பதை ராகுல் சொல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

