போபால்: ம.பி.,யில் ஏழைகளுக்கு குறைந்த நிலையில் காஸ் சிலிண்டர், ஏழை குடும்பங்களைச் சேர்ந்த மகளிருக்கு இலவச கல்வி வழங்கப்படும் என பா.ஜ., வாக்குறுதி அளித்து உள்ளது.
ம.பி.,யில் வரும் 17 ல் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பா.ஜ., மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் பா.ஜ., தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டு உள்ளது. இதனை அக்கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா, மாநில தலைவர் வி.டி.சர்மா, முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் வெளியிட்டனர்.
அதில் கூறப்பட்டு உள்ளதாவது
* ஏழை குடும்பங்களுக்கு ரூ.450க்கு காஸ் சிலிண்டர் வழங்கப்படும்
* ஏழை பெண்களுக்கு பட்ட மேற்படிப்பு வரை இலவச கல்வி வழங்கப்படும்.
* கோதுமை ஒரு குவிண்டாலுக்கு ரூ.2,700, நெல் ஒரு குவிண்டாலுக்கு ரூ.3,100 வரை ஆதார விலை வழங்கப்படும்.
* தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளில் மருத்துவ கல்லூரி அமைக்கப்படும்
* ஏழை குடும்பத்தை சேர்ந்த மாணவர்களுக்கு பிளஸ் 2 வரை இலவச கல்வி
* மாநிலத்தில் ஐஐடி போன்று ம.பி., தொழில்நுட்ப மையம் , எய்ம்ஸ் போன்று ம.பி., மருத்துவ அறிவியல் மையம், ஏற்படுத்தப்படும்.
* அனைவருக்கும் வீடு கிடைப்பதை உறுதி செய்ய பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டம் போன்று, முதல்வர் ஜன் ஆவாஸ் யோஜனா திட்டம் அறிமுகம் செய்யப்படும்.
* அரசு பள்ளிகளில் மதிய உணவு திட்டத்துடன், காலை உணவு வழங்கப்படும்.
* 6 எக்ஸ்பிரஸ்வே சாலைகள் அமைக்கப்படும்.
* பழங்குடியின சமுதாயம் அதிகாரம் பெற பட்ஜெட்டில் ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டு உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

