வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் 
வாஷிங்டன்: உலக மக்கள் தொகை 800 கோடியை தாண்டி விட்டதாக அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு மையம் கூறியுள்ளது.
இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: உலக மக்கள் தொகை கடந்த செப்டம்பரில் 800 கோடியை கடந்துவிட்டது. கடந்த ஆண்டு நவ., மாதமே உலக மக்கள் தொகை இந்த எண்ணிக்கையை அடைந்துவிட்டதாக ஐ.நா., சபை மதிப்பிட்டு இருந்தது. மக்கள் தொகை கணக்கெடுப்பு முறை நாட்டுக்கு நாடு வேறுபடுவதால், இந்த முரண்பாடு நிலவுகிறது.
உலக மக்கள் தொகை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 2000ம் ஆண்டு 600 கோடியாக இருந்த உலக மக்கள் தொகை தற்போது 800 கோடியாக அதிகரித்துள்ளது. மக்களின் சராசரி வயது 32 ஆக அதிகரித்துள்ளது. வரும் 2060ம் ஆண்டு 39 ஆக உயரும்.
கனடா போன்ற நாடுகளில் முதியோர்களின் இறப்பு விகிதம் குறைந்துள்ளது. கடந்த 1960- 2000 வரையிலான காலகட்டத்தில் உலக மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 2 மடங்காக இருந்த நிலையில், தற்போது அது குறைந்துள்ளது.
பெண்கள் கருவுறும் விகிதம் தொடர்ச்சியாக குறைந்துவருவது கடந்த 50 ஆண்டுகளாக உலக மக்கள் தொகை குறைவான விகிதத்தில் அதிகரித்து வருவதற்கான காரணம் ஆகும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

