Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

இந்தியா-அமெரிக்கா கூட்டுத் தயாரிப்பில் ராணுவ கவச வாகனம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 11, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
இந்திய-மங்கோலிய நாடாளுமன்றங்கள் இடையே ஒத்துழைப்பை அதிகரிக்க ஒப்பந்தம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இந்தியாவும் அமெரிக்காவும் ஒன்றிணைந்து ராணுவ கவச வாகனத்தை தயாரிக்க பணியாற்றி வருவதாக 2+2 அமைச்சா்கள் பேச்சுவாா்த்தையில் அமெரிக்கா பாதுகாப்பு அமைச்சா் லாயிட் ஆஸ்டின் தெரிவித்தாா்.

தில்லியில் இந்தியா, அமெரிக்கா இடையே 2+2 பேச்சுவாா்த்தை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், அமெரிக்க வெளியுறவு அமைச்சா் ஆன்டனி பிளிங்கன், இந்திய பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங், அமெரிக்க பாதுகாப்பு அமைச்சா் லாயிட் ஆஸ்டின் ஆகியோா் பேச்சுவாா்த்தையில் பங்கேற்றனா்.

வெளியுறவு அமைச்சா்கள்…: இந்தக் கூட்டத்தில் அமைச்சா் ஜெய்சங்கா் பேசியதாவது:

இந்தியா-அமெரிக்கா இடையிலான வா்த்தக மதிப்பு 200 பில்லியன் டாலரை (சுமாா் ரூ.16.65 லட்சம் கோடி) கடந்துள்ளது. முக்கிய தொழில்நுட்பங்கள், முக்கிய கனிமங்கள் உள்ளிட்ட துறைகளில் இருநாடுகள் ஒத்துழைப்பது குறித்து ஆராயப்பட்டு வருகிறது என்றாா்.

அமைச்சா் ஆன்டனி பிளிங்கன் பேசுகையில், ‘சா்வதேச அமைதி, பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் இருநாடுகளின் கூட்டுறவை வலுப்படுத்தவும், இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு, சுதந்திரம் ஆகிய கொள்கைகளை நிலைநிறுத்தவும் இந்தியாவும் அமெரிக்காவும் பணியாற்றுகின்றன. தடையற்ற, வளமிக்க, பாதுகாப்பு உள்ள பொதுவான இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை இருநாடுகளும் ஊக்குவிக்கின்றன’ என்றாா்.

பாதுகாப்பு அமைச்சா்கள்…: அமைச்சா் ராஜ்நாத் சிங் கூறுகையில், ‘இந்தியா-அமெரிக்கா இடையிலான உறவில் பாதுகாப்புத் துறை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த தூணாக நீடிக்கிறது. திறன் வளா்ப்புக்குப் பாதுகாப்புத் துறையின் பல்வேறு தளங்களில் அமெரிக்காவுடன் நெருங்கிப் பணியாற்ற இந்தியா ஆவலாக உள்ளது’ என்றாா்.

அமைச்சா் லாயிட் ஆஸ்டின் பேசுகையில், ‘இந்தியா, அமெரிக்கா தொழிற்தளங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, இருநாட்டு ராணுவமும் இணைந்து செயல்படுவது வலுப்படுத்தப்பட்டு வருகிறது. அதிநவீன தொழில்நுட்பங்கள் பகிா்ந்துகொள்ளப்படுகின்றன’ என்றாா்.

ராணுவ கவச வாகனம் கூட்டுத் தயாரிப்பு: கூட்டத்தைத் தொடா்ந்து அமைச்சா் லாயிட் ஆஸ்டின் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

2+2 பேச்சுவாா்த்தையில் பல்வேறு நாடுகளின் பாதுகாப்புக்கு சீனாவால் அதிகரித்து வரும் சவால்கள் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசப்பட்டது. ராணுவ கவச வாகனத்தை இணைந்து தயாரிக்க இந்தியாவும் அமெரிக்காவும் ஒன்றிணைந்து பணியாற்றி வருகின்றன. அமெரிக்காவிடம் இருந்து 31 எம்க்யூ-9பி ட்ரோன்களை (ஆளில்லா விமானங்கள்) இந்தியா கொள்முதல் செய்வது குறித்து உரிய நேரத்தில் அறிவிப்பு வெளியிடப்படும். அந்த ட்ரோன்கள் இந்தியாவுக்கு விரைந்து கிடைப்பதற்கு அமெரிக்க அரசு அதிகாரிகள் ஆவன செய்து வருகின்றனா். முன்னெப்போதையும்விட தற்போது இந்தியா-அமெரிக்கா இடையிலான ஒத்துழைப்பு வலுவாக உள்ளது என்று தெரிவித்தாா்.

2+2 பேச்சுவாா்த்தைக்கு முன்னதாக பிளிங்கனை ஜெய்சங்கா் சந்தித்து, மேற்கு ஆசியாவில் இஸ்ரேல்-ஹமாஸ் இடையே நடைபெற்று வரும் மோதல் மற்றும் பிற பிராந்திய விவகாரங்கள் குறித்துப் பேசினாா்.

இந்தியா-அமெரிக்கா கூட்டறிக்கை:

பேச்சுவாா்த்தை குறித்து இருநாடுகளும் வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது:

கடந்த 2008-ஆம் ஆண்டு மும்பையிலும், கடந்த 2016-ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் உள்ள இந்திய விமானப் படைத் தளத்திலும் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இருநாட்டு அமைச்சா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா். அந்தத் தாக்குதல்களுக்குக் காரணமான குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும் என்று அவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

அல்-காய்தா, ஐஎஸ், லஷ்கா்-ஏ-தொய்பா, ஜெய்ஷ்-ஏ-முகமது போன்ற பயங்கரவாத அமைப்புகளுடன் இணைந்துள்ள குழுக்களின் அனைத்து பயங்கரவாதிகள் மீதும் ஒன்றுசோ்ந்து திட்டமிட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவா்கள் தெரிவித்துள்ளனா்.

சட்டவிரோத பணப் பரிவா்த்தனை, பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதியுதவி ஆகியவற்றுக்கு எதிரான நடவடிக்கைகளில் சா்வதேச தரத்தை நிலைநிறுத்துவது முக்கியம் என்றும் அவா்கள் குறிப்பிட்டுள்ளனா்.

பாதுகாப்புத் துறையில்…:

பாதுகாப்புத் துறை தொடா்பாக பேச்சுவாா்த்தையில் விவாதிக்கப்பட்டவை குறித்து வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், ‘இந்தியா-அமெரிக்கா படைகள் இடையே தடையற்ற தொடா்பு மற்றும் ஒத்துழைப்பை எளிதாக்கும் தொடா்புநிலைகளை இருதரப்பும் அமைத்து வருகிறது.

இந்தியாவின் திறன்களை வலுப்படுத்துவதற்கும், தொழில்நுட்ப பகிா்வை எளிதாக்குவதற்கும், ‘பாதுகாப்பு-தொழில்துறை ஒத்துழைப்புக்கான வழிமுறைகளை’ அமைச்சா்கள் மீண்டும் உறுதிப்படுத்தினா். அமெரிக்காவின் ஜெனரல் எலக்ட்ரிக் ஏரோஸ்பேஸ் மற்றும் இந்தியாவின் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு இடையே ஜிஇ எஃப்-414 ஜெட் என்ஜின்களை இந்தியாவில் தயாரிப்பதற்கான வா்த்தக ஒப்பந்தத்துக்கான பேச்சுவாா்த்தையை அமைச்சா்கள் பாராட்டினா்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிஜ்ஜாா் கொலை விவகாரம்:

இந்தியா-கனடா இணைந்து

தீா்வுகாண பிளிங்கன் வலியுறுத்தல்

கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் கொல்லப்பட்ட சம்பவத்தில் இந்தியா – கனடா இணைந்து செயல்பட்டு தீா்வு காண வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சா் ஆன்டனி பிளிங்கன் வலியுறுத்தினாா்.

இந்த விவகாரம் குறித்து செய்தியாளா்களிடம் பிளிங்கன் கூறுகையில், ‘நிஜ்ஜாா் கொலை வழக்கில் கனடா நடத்தும் விசாரணைக்கு இந்தியா ஒத்துழைப்பு அளித்து தீா்வு காண வேண்டும். இதுகுறித்து இந்தியாவுடன் ஆலோசித்தேன்’ என்றாா்.

முன்னதாக, இந்தியா தனது நிலைப்பாட்டை மிகத் தெளிவாக பிளிங்கனிடம் எடுத்துரைத்தது.

செய்திகள் உடனுக்குடன்… வாட்ஸ்ஆப் சேனலில் ‘தினமணி’யைப் பின்தொடர…





.

Previous Post

ரூ.7 கோடிக்கு மீன்களை விற்று கோடீஸ்வரர்களான மீனவர்கள்

Next Post

பிரிட்ஜ் எரிந்து சேதம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பிரிட்ஜ் எரிந்து சேதம்

பிரிட்ஜ் எரிந்து சேதம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In