வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் 
புதுடில்லி: இந்தாண்டு தீபாவளியை காஷ்மீரின் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் ஜவான்களுடன் பிரதமர் மோடி கொண்டாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே, தீபாவளி அன்று, பிரதமர் டில்லியில் இருப்பதில்லை. ராணுவ வீரர்களுடன், தீபாவளி கொண்டாடி வருகிறார். குடும்பத்தை மறந்து, மக்களைப் பாதுகாப்பதற்காக கடுமையான குளிரில் நாட்டைப் பாதுகாக்கும் வீரர்களுடன், தீபாவளி தினத்தை கொண்டாடி வருகிறார் பிரதமர்.அதன்படி கடந்த 2022ம் ஆண்டு சியாச்சின் பகுதியில் ஜவான்களுடன் தீபாவளியை கொண்டாடினார்.
இந்த முறையும் தீபாவளியன்று ஜம்மு-காஷ்மீரின் சர்வதேச எல்லைக்கட்டுப்பாட்டு கோடு ஆங்கோர் செக்டர் பகுதியில் நம் நாட்டை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வரும் ஜவான்களுடன் சந்திப்பு நடக்கலாம் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

