Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

பிடிக்கச் சென்ற காவல்துறையினர் மீது காரை ஏற்றிய பசுத் திருடர்கள்! இருவர் காயம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 10, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
பிடிக்கச் சென்ற காவல்துறையினர் மீது காரை ஏற்றிய பசுத் திருடர்கள்! இருவர் காயம்
38
SHARES
62
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram
ANI-20230328171217

மகாராஷ்டிர மாநிலம் பல்கார் மாவட்டத்தில் பசு திருடர்களைப் பிடிக்கச் சென்ற காவல்துறையினர் மீது திருடர்களின் வாகனம் மோதியதில் இரண்டு காவல் துறை அதிகாரிகள் காயமடைந்தனர். மேலும் மூன்று பசுமாடுகளையும் ஒரு எருமை மாட்டையும் மீட்ட காவல்துறையினர் இருவரைக் கைது செய்துள்ளனர்.

சம்பவத்தன்று ரோந்துப் பணியில் இருந்த காவல்துறையினர் பசுக்களை கடத்திச் சென்ற இரண்டு கார்களை மடக்கிப் பிடித்தனர். ஆனால் தப்பிக்க முயன்ற திருடர்கள் காரை வேகமாக ஓட்டிச் சென்றனர். அப்போது காரைத் தடுக்க முயன்ற காவல்துறையினர் காயமடைந்தனர்.

தப்பிக்க முயன்ற கார், பாலத்தின் சுவற்றில் மோதி நின்றது. இதில் வண்டியை நிறுத்த முயன்ற துணை ஆய்வாளர் ரவீந்திர வான்கடே படுகாயமடைந்தார், மேலும் காவல்துறை அதிகாரி ராக்கேஷ் பட்டீல் கைகளில் காயம் ஏற்பட்டது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காவல்துறையினர் காயமடைந்தபோதிலும் கார்களை மடக்கிப்பிடித்து கால்நடைகளை மீட்டனர். மேலும் இரண்டு கார்கள் மற்றும் பைக்குகளைக் கைப்பற்றினர். மொத்தம் 9 பேர் இந்தத் திருட்டில் சம்மந்தப்பட்டிருப்பதாகக் கண்டறிந்துள்ள காவல்துறையினர் இருவரைக் கைது செய்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட கார்களில் அரிவாள்களும், இரும்புக் கம்பிகளும், கற்கள் நிரம்பிய பைகளும் இருந்தன. கைது செய்யப்பட்ட திருடர்கள் மீது கொலை முயற்சி மற்றும் விலங்குகள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

.

Previous Post

கேரளத்தில் 155 முறை போக்குவரத்து விதிகளை மீறியவர்: ரூ.86,000 அபராதம்!

Next Post

பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக ஒற்றுமைப் பேரணி: காங்கிரஸ் அறிவிப்பு!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக ஒற்றுமைப் பேரணி: காங்கிரஸ் அறிவிப்பு!

பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக ஒற்றுமைப் பேரணி: காங்கிரஸ் அறிவிப்பு!

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    பசு மாடுகளை காரில் திருடி கடத்திச் சென்றனர் என்பது நம்பும்படியாக இல்லை வேண்டுமானால் லாரிகளிலோ அல்லது வேனிலோ ஏற்றிச் செல்ல முடியும் கார்களின் எப்படி ஏற்றி செல்ல முடியும் அந்த குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் ரௌடி பயலுகளாக இருப்பார்கள் என்று நினைக்கிறேன் ஏனெனில் அருவா கத்தி பைகளில் கற்கள் போன்ற ஆயுதங்கள் ரவுடி பயலுகல் பயன்படுத்த வைத்திருப்பார்கள்
    அவர்கள் மீது பொய் வழக்கு போட வேண்டும் என்பதற்காக போட்டிருக்கிறார்கள் ஆனால் உண்மையில் அவர்கள் மாடுகளை திருடும் திருடர்கள் அல்ல ரவுடி பயல்கள்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In