டில்லி: பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 04-ம் தேதி துவங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது 5 மாநில சட்டசபை தேர்தல் நடக்கிறது. இத்தேர்தல் ஒட்டு எண்ணிக்கை டிச.3-ம் தேதி நடக்கிறது.
இந்நிலையில் பாராளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறியது, பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிச.04-ம் தேதி துவங்கி டிச.22-ம் தேதி வரை 19 நாட்கள் நடக்கிறது. இதில் மொத்தம் 15 அமர்வுகள் நடக்க உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


பார்லிமென்ட் தொடங்கட்டும் ஏதாவது நல்ல திட்டங்களோ அல்லது நல்ல சட்டங்களோ ஏழைகளுக்காகவும் பொது மக்களுக்காகவும் வந்தால் நன்றாக இருக்கும்