புதுடில்லி: எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,கள் மீதான வழக்குகளை விரைந்து விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ள ஆண்டுகளை உயர்த்த கோரி தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று(நவ.,09) விசாரணைக்கு வந்தது.
அப்போது உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு: எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,கள் மீதான வழக்குகளை விரைந்து விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும். வழக்குகளை விசாரிக்க சிறப்பு அமர்வு அமைக்க வேண்டும்.
வழக்குகளை விசாரிக்கும் மாவட்ட நீதிபதிகள், நீதிபதிகளிடம் இருந்து வழக்குகள் தொடர்பாக அறிக்கை கேட்கலாம். இவ்வாறு கிழமை நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு மிகவும் சிறப்பானது இதன் மூலம் எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் அமைச்சர்கள் மீதான வழக்கு விரைவாக விசாரித்து தீர்ப்பளிக்க பட்டால் பொது நலன் பாதுகாக்கப்படும்