
நாக்பூர்: மகாராஷ்டிர மாநிலத்தில் டீ தராததால் கோபமடைந்த மருத்துவர் அறுவை சிகிச்சையை பாதியிலேயே விட்டுச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாக்பூர் மாவட்டம், மெளடா பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் 8 பெண்களுக்கு செவ்வாய்க்கிழமை கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.
இதில், 4 பெண்களுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட நிலையில், மருத்துவர் பாலவி மருத்துவமனை ஊழியரிடம் டீ கேட்டுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் டீ கிடைக்காததால் கோபமடைந்த மருத்துவர், அறுவை சிகிச்சையை பாதியிலேயே விட்டுச் சென்றார்.
மீதமுள்ள 4 பெண்களுக்கு மயக்கம் மருந்து கொடுக்கப்பட்டு அறுவை சிகிச்சைக்கு தயாராக இருந்த நிலையில், மருத்துவரின் செயல் உறவினர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
உடனடியாக மாவட்ட மருத்துவ அலுவரிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில், வேறொரு மருத்துவர் வரவழைக்கப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து விசாரணைக் குழு அமைக்கப்பட்டு மருத்துவர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட மருத்துவ அதிகாரி உறுதி அளித்துள்ளார்.


அந்த டாக்டர் மீதான புகாரை மருத்துவ குழு அமைக்கப்பட்டுள்ளது அது விசாரிக்கும் என்று மாவட்ட மருத்துவ அதிகாரி கூறியுள்ளார் விசாரணை கமிஷன் விசாரணை குழு இப்படியே போட்டு பொது மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் இந்த விசாரணை குழுவின் முடிவில் அந்த மருத்துவர் மீது எந்த தவறும் இல்லை என்றே வரும்