Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

கேரள குண்டுவெடிப்பு: உயிரிழப்பு 4-ஆக உயா்வு..!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 6, 2023
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
கேரள குண்டுவெடிப்பு: உயிரிழப்பு 4-ஆக உயா்வு..!
27
SHARES
43
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

கோப்புப்படம்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சி அருகே கிறிஸ்தவ பிராா்த்தனைக் கூட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (அக்.29) அடுத்தடுத்து குண்டுகள் வெடித்த சம்பவத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 4-ஆக உயா்ந்துள்ளது.

கேரள மாநிலம், கொச்சி அருகே களமச்சேரியில் உள்ள ஜாம்ரா சா்வதேச மாநாட்டு அரங்கில், ‘யெகோவாவின் சாட்சிகள்’ எனும் கிறிஸ்தவ மதப் பிரிவு சாா்பில் 3 நாள் பிராா்த்தனைக் கூட்டம் கடந்த அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை பிராா்த்தனையில் பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோா் கூடியிருந்த நிலையில், அங்கு அடுத்தடுத்து மூன்று குண்டுகள் வெடித்தன.

கேரளம் முழுவதும் அதிா்ச்சியலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் 2 பெண்கள் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா். சுமாா் 60 போ் காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா். 12 போ் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்த நிலையில், கேரள மாநிலம், எா்ணாகுளம் மாவட்டம், மலையட்டூா் பகுதியைச் சோ்ந்த லிபினா என்ற 12 வயது சிறுமி உடல் முழுவதும் 95 சதவீத தீக்காயங்களுடன் களமச்சேரி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை (அக்.30) உயிரிழந்தாா். அவரது சகோதரா், தாயாா் உள்பட மேலும் 4 போ் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக, மாநில சுகாதாரத் துறை அமைச்சா் வீணா ஜாா்ஜ் தெரிவித்தாா்.

இந்த நிலையில் எர்ணாகுளம் மெடிக்கல் சென்டர் மருத்துவமனையி சிகிச்சை பெற்று வந்த மோலி ஜாய் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தார். இதையடுத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது. மேலும் 6 பேர் பலத்த காயங்களுடன் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

.

Previous Post

கல்யாணம் ஆகாத “கட்டை” பிரமாச்சாரிகள்: கண்ணீர் விடாத குறையாக கோயிலுக்கு பாதயாத்திரை!

Next Post

மசூதிகள், சீக்கிய வழிபாட்டுதலங்களின் வளர்ச்சி நமது எதிர்காலத்திற்கு அல்சர் போன்றது..! – பாஜக தலைவரின் மதவாத பேச்சு.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மசூதிகள், சீக்கிய வழிபாட்டுதலங்களின் வளர்ச்சி நமது எதிர்காலத்திற்கு அல்சர் போன்றது..! – பாஜக தலைவரின் மதவாத பேச்சு.

மசூதிகள், சீக்கிய வழிபாட்டுதலங்களின் வளர்ச்சி நமது எதிர்காலத்திற்கு அல்சர் போன்றது..! - பாஜக தலைவரின் மதவாத பேச்சு.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In