பெங்களூரு: கர்நாடகா மாநிலம் கோடஹள்ளிளை சேர்ந்த பெண் கிடைக்காத இளைஞர்கள் திருமணத்திற்கு பெண் கிடைக்க வேண்டி ஸ்ரீமலையில் உள்ள மாதேஸ்வரன் கோயிலுக்கு 160 கி.மீ பாதயாத்திரையாக சென்றனர். பின் சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்து வழிபாடு செய்தனர்.
கர்நாடகா மாநிலம், ஸ்ரீமலையில் மாதேஸ்வரன் சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயில் பக்தர்களின் குறை தீர்க்கும் தலமாக அமைந்துள்ளது. இங்கு வழிபாடு செய்தால் உடனடியாக திருமணம் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இங்கு தங்கள் திருமணத்துக்கு பெண் கிடைக்க வேண்டி, கர்நாடகா கோடஹள்ளிளை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் 160 கி.மீ., பாதயாத்திரையாக சென்று சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்து வழிபாடு செய்தனர்.
இது கல்யாணம் ஆகாத கட்டை பிரமாச்சாரிகள் கண்ணீர் விடாத குறையாக கோயிலுக்கு பாதையாத்திரை சென்று வழிபாடு நடத்தியது பரபரப்பாக பேசப்படுகிறது. வரும் காலத்தில் இளைஞர்கள் வாழ்க்கையில் ஒளியேற்றி வைக்க பெண்கள் கிடைக்காத சூழல் வந்துவிடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.


வேலை வெட்டிக்கு போகாமல் தெண்டமாக சுற்றிக் கொண்டிருந்தாலும் ஒரே பொய்யாக பேசிக்கொண்டு திரிந்தாலும் எவளுமே இவர்களை கல்யாணம் செய்ய மாட்டார்கள் மணப்பெண்கள் என்ன சந்தையிலயா இருக்கிறார்கள் பெண் கிடைக்கவில்லை பெண் கிடைக்கவில்லை என்று சொல்வதற்கு இவர்களிடம் திறமை இல்லை வருமானம் இல்லை நேர்மை இல்லை எனவே இவர்களுக்குபெண்கள் இல்லை இதற்கு கடவுள் என்னடா செய்வார் முட்டாப் பயலுகளா