Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

“உழைப்பவனை தேடி கண்டுபிடித்து இயக்கம் நடத்தினால் தான் பலன் உண்டு” – அதிருப்தியில் நேரு ஆதரவாளர்கள்.!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 6, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
“உழைப்பவனை தேடி கண்டுபிடித்து இயக்கம் நடத்தினால் தான் பலன் உண்டு” – அதிருப்தியில் நேரு ஆதரவாளர்கள்.!
83
SHARES
134
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

திருச்சி: திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷுக்கு எதிராக ஒட்டப்பட்ட போஸ்ர் குறித்த பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இதற்கு என்ன காரணம், திருச்சியில் இப்போது என்ன நடக்கிறது என்பது குறித்துப் பார்க்கலாம்.

திமுக வலிமையாக இருக்கும் மாவட்டங்களில் ஒன்று திருச்சி. திமுக தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே வலிமையாக இருக்கும் மாவட்டங்களில் ஒன்றாகத் திருச்சி இருக்கிறது. திமுகவுக்கு திருச்சியில் இருந்து பல தலைவர்களும் கிடைத்துள்ளனர்.

 Minister Anbil Mahesh And KN Nehru conflict again begins in Trichy DMK

கடந்த சட்டசபைத் தேர்தலிலும் கூட அங்குள்ள அத்தனை சட்டசபை தொகுதிகளும் திமுகவே வென்றது. அந்தளவுக்குத் திருச்சியில் வலிமையாக திமுக இருந்து வருகிறது. இப்போது அங்கு தான் சிறு பூசல் கிளம்பியுள்ளது.

திருச்சி திமுக: திருச்சியில் பல காலமாகவே திமுக மூத்த தலைவர் கே.என். நேரு மற்றும் அன்பில் மகேஷ் ஆகியோருக்கு இடையே மறைமுகமாக மோதல் நிலவி வருவதாகக் கூறப்படும். அன்பில் மகேஷுக்கும் திமுக தலைமைக்கும் இருக்கும் தொடர்பு அனைவருக்கும் தெரியும். அதேநேரம் கே.என். நேரு திமுகவின் மூத்த மற்றும் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருக்கிறார். இதன் காரணமாகவே திருச்சியில் எந்தவொரு முக்கிய முடிவாக இருந்தாலும் இரு தரப்பிற்கும் அதிருப்தி ஏற்படாத வகையில் முடிவுகள் எடுக்கப்படுகிறது,

இந்தச் சூழலில் திருச்சியில் அமைச்சர் கே என் நேருவின் ஆதரவாளர்கள் அமைச்சர் அன்பில் மகேஷுக்கு எதிராக போஸ்டர் ஓட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளராக இருக்கும் அன்பில் மகேஷ், அங்கே கட்சி பொறுப்பில் இருக்கும் கே.என். நேருவின் ஆதரவாளர்களை நீக்கி, அதற்குப் பதிலாகத் தனது ஆதரவாளர்களுக்குப் பொறுப்பு வழங்கி வருவதாக சில காலமாகவே புகார் இருந்து வருகிறது. அது தொடர்பாகவே இந்த போஸ்டர் ஒட்டப்பட்டு இருக்கிறது.

பதவி சர்ச்சை: அமைச்சர் அன்பில் மகேஷ், அங்கே பொறுப்பில் இருந்த கே என் நேரு ஆதரவாளர் குடமுருட்டி சேகரை நீக்கிவிட்டு, அவருக்குப் பதிலாகத் தனது ஆதரவாளருக்குப் பதவி வழங்கியதாகக் கூறப்படுகிறது. அன்பில் மகேஷ் அவ்வப்போது இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதால் திருச்சி திமுகவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த கே என் நேரு ஆதரவாளர்கள், குடமுருட்டி சேகர் திருச்சி – கரூர் பைபாஸ் சாலையில் இது தொடர்பான போஸ்டர் ஒன்றை வைத்துள்ளனர்.

திமுக தலைவர் அண்ணாவின் படத்துடன் இருக்கும் அதில், “உழைப்பவனை தேடி கண்டுபிடித்து இயக்கம் நடத்தினால் தான் பலன் உண்டு, கிடைத்தவனை கொண்டு நடத்தினால் பலனில்லை” என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது. அமைச்சர் அன்பில் மகேஷின் செயல்பாடுகளால் அதிருப்தி அடைந்த கே. என். நேரு ஆதரவாளர்கள் இந்த போஸ்டரை வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது திருச்சியில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

திமுக தலைமைக்கு போன செய்தி: இந்த விவகாரம் இப்போது திமுக தலைமைக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், கட்சியில் ஒருவர் ஒரு பதவி மட்டுமே இருக்க வேண்டும் என்று திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் கூறியுள்ள நிலையில், அன்பில் மகேஷ் இளைஞரணி மாநிலச் செயலாளர், திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் என இரு பதவிகளில் இருப்பதால் இதிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கே. என். நேரு ஆதரவாளர்கள் வலியுறுத்துகிறார்கள்.

இது தொடர்பாக அவர்கள் திமுக தலைமைக்கு மனுக்களையும் அனுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது. லோக்சபா தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், அதற்குள் இரு தரப்பிற்கும் இடையே இருக்கும் பூசலை சரி செய்ய வேண்டும் என்பதே திமுகவினர் கோரிக்கையாக இருக்கிறது.

Previous Post

மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் 91 வயதில் ஓய்வு..! – 92 வயதில் மத்திய அரசுக்கு எதிரான வழக்கில் ஏன் ஆஜராகிறார்..?

Next Post

தாங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல என்ற உண்மையை ஆளுநர்கள் மறந்துவிடக் கூடாது..! – உச்ச நீதிமன்றம் குட்டு.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தாங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல என்ற உண்மையை ஆளுநர்கள் மறந்துவிடக் கூடாது..! – உச்ச நீதிமன்றம் குட்டு.

தாங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல என்ற உண்மையை ஆளுநர்கள் மறந்துவிடக் கூடாது..! - உச்ச நீதிமன்றம் குட்டு.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In