Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

எத்தனை வழக்கு வந்தாலும் சனாதனத்தை எந்நாளும் எதிர்ப்போம்: திருமாவுடன் சேர்ந்து உதயநிதி ’முழக்கம்’

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 6, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
எத்தனை வழக்கு வந்தாலும் சனாதனத்தை எந்நாளும் எதிர்ப்போம்: திருமாவுடன் சேர்ந்து உதயநிதி ’முழக்கம்’
25
SHARES
41
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: எத்தனை வழக்குகள் வந்தாலும் சனாதனத்தை எந்த நாளும் எதிர்ப்போம் என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி.யுடன் இணைந்து திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகின்றனர். நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி இந்த கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக சென்னையில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் சந்தித்தனர். அப்போது நீட் தேர்வை ரத்து செய்ய கோரி விடுதலை சிறுத்தைகள் இயக்கத்தினரிடம் கையெழுத்துகள் பெறப்பட்டன. முதலில் திருமாவளவன் கையெழுத்திட பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் கையெழுத்திட்டனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது: சனாதனம் என்பது பல நூற்றாண்டு பிரச்சனை.
சனாதனத்தை நாங்கள் எந்த நாளும் எதிர்ப்போம். சனாதனம் குறித்து பேசியதற்காக எத்தனை வழக்குகள் வந்தாலும் அதனை நாங்கள் சந்திப்போம்.

தற்போது நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிறோம். இந்த கையெழுத்து இயக்கத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் முழுமையாக பங்கேற்க வேண்டும். அனைத்து இயக்கத்தினரையும் இது தொடர்பாக சந்திக்க உள்ளோம். நீட் தேர்வுக்கு எதிராக இதுவரை 10 லட்சம் பேர் கையெழுத்திட்டுள்ளனர். நீட் தேர்வால் இன்னொரு உயிரிழப்பு நடக்கக் கூடாது. நீட் தேர்வுக்கு எதிராக 50 லட்சம் கையெழுத்துகள் பெறப்பட்ட பின்னர் ஜனாதிபதியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குவார். இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

அப்போது திருமாவளவன் பேசுகையில், நீட் தேர்வுக்கு எதிரான திமுகவின் கையெழுத்தி இயக்கத்தில் தமிழ்நாடு முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் இணைய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

Previous Post

ராஜஸ்தானில் 6-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக!

Next Post

மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் 91 வயதில் ஓய்வு..! – 92 வயதில் மத்திய அரசுக்கு எதிரான வழக்கில் ஏன் ஆஜராகிறார்..?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் 91 வயதில் ஓய்வு..! – 92 வயதில் மத்திய அரசுக்கு எதிரான வழக்கில் ஏன் ஆஜராகிறார்..?

மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் 91 வயதில் ஓய்வு..! - 92 வயதில் மத்திய அரசுக்கு எதிரான வழக்கில் ஏன் ஆஜராகிறார்..?

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    இது தேவையில்லாத பேச்சு முதலில் லஞ்சத்தையும் ஊழலையும் ஒழிப்பதற்கும் கட்டுப்படுத்தவதற்கும் முடிவு செய்யுங்கள் ஏனென்றால் தங்களிடம் தான் ஆட்சியும் அதிகாரமும் உள்ளது அதை விட்டுவிட்டு அதை ஒழிப்பேன் இதை ஒழிப்பேன் என்று தேவையில்லாத பேச்சுக்கள் பேச வேண்டாம் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அதாவது லஞ்ச ஒழிப்பு துறையின் இயக்குனராக முன்பு இருந்த கந்தசாமி என்பவரை போல் சப்பையாக போடாமல் வேகமாக சிறப்பாக செயல்படும் ஒரு நல்ல போலீஸ் அதிகாரியை லஞ்ச ஒழிப்புத் துறையின் இயக்குனராக நியமியுங்கள் .

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In