ராய்ப்பூர் : சத்தீஸ்கரில், நாளை முதற்கட்ட தேர்தல் நடக்கவுள்ள நிலையில், ஆளும் காங்., தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
முதல்வர் பூபேஷ் பாகேல் தலைமையில், காங்., ஆட்சி நடக்கும் சத்தீஸ்கரில், மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளில், 20ல், நாளை முதற்கட்ட தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் கமிஷன் செய்து வருகிறது.
இந்நிலையில், ராஜ்நந்த்காவ்ன் மாவட்டத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், காங்., தேர்தல் அறிக்கையை முதல்வர் பூபேஷ் பாகேல் வெளியிட்டார்.
அதில், காங்., மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மழலையர் பள்ளி முதல், அரசுக் கல்லுாரிகளில் முதுகலை வரை இலவசக் கல்வி; 200 யூனிட் மின்சாரம் இலவசம்; கிராமப்புற ஏழைகளுக்கு 17.5 லட்சம் வீடுகள். நெல்லுக்கு குவின்டாலுக்கு 3,200 ரூபாய்; பெண்களுக்கு மானிய விலையில் சமையல் காஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.

